ராம்சரண் படத்திலிருந்து ஏ ஆர் ரகுமான் மாற்றப்பட்டாரா…? படக்குழு கூறும் பதில்….!!

12 hours ago
ARTICLE AD BOX

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். RC16 என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இதனிடையே கடந்த சில நாட்களாக இந்த படத்தில் இருந்து ஏ ஆர் ரகுமான் விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

RC16 படத்தின் இயக்குனர் புஜ்ஜி பாபு இதற்கு முன்பு இயக்கிய உப்பெனா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்தார். அதனால் இந்த படத்திலும் அவர்தான் இசையமைக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் RC16 பட குழு தங்கள் தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவித்து “ஏ.ஆர்.ரகுமான் மாற்றப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை, அது வெறும் வதந்தியே” என்று தெரிவித்துள்ளது.

Read Entire Article