ARTICLE AD BOX
ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகர் மணிகண்டன். குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக மணிகண்டன் நடிப்பில் குடும்பஸ்தன் திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
வெளியானது முதல் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பு தான் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குடும்பஸ்தன் திரைப்படம் 6.2 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.