அஜித்துக்கு 3 கெட்டப்பா?!.. குட் பேட் அக்லி கதை என்ன?!.. மனம் திறக்கும் ஆதிக்!…

11 hours ago
ARTICLE AD BOX
good bad ugly

Good Bad Ugly: ஜிவி பிரகாஷை வைத்து திரிஷா இல்லன்னா நயன்தாரா என்கிற படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தில் நிறைய கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எனவே, இளசுகளிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அதோடு, பெரியவர்களும் ரசிக்கும்படியாக காட்சிகள் இருந்தது.

எனவே, இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், அதன்பின் ஆதிக் இயக்கிய சில படங்கள் ஓடவில்லை. சிம்பு சொதப்பியதில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தையும் அவரால் நினைத்தபடி எடுக்க முடியவில்லை. அதன் பிரபுதேவாவை வைத்து பகீரா என்கிற படத்தை இயக்கினார். அதுவும் ஓடவில்லை.

#image_title

அதன்பின்னர்தான் நேர்கொண்ட பார்வை படம் மூலம் அஜித்தின் நட்பு கிடைத்து இப்போது குட் பேட் அக்லி படத்தின் இயக்குனராக மாறியிருக்கிறார். இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது சமீபத்தில் வெளியான டீசரை பார்த்தாலே புரிகிறது. இந்நிலையில், பிரபல வார இதழ் ஒன்றில் பேசியுள்ள ஆதிக் குட் பேட் அக்லி படம் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நேகொண்ட பார்வை படத்தில் நடிக்கும்போதுதான் அஜித் சாரை முதன் முதலில் பார்த்தேன். அவரை தூரத்திலிருந்து ரசிப்பேனே தவிர அவரிடம் பேச தயக்கமாகவும், பயமாகவும் இருக்கும். 10 நாட்களுக்கு பின்னர்தான் பேசவே ஆரம்பித்தேன். ‘உன்கிட்ட ஒரு எனர்ஜி இருக்கு. இன்னும் நல்ல சினிமா பண்ணலாம். நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என அவர் சொன்னபோது சந்தோஷம் தாங்கவில்லை. அன்று இரவு முழுவதும் நான் துவங்கவே இல்லை.

adhik

#image_title

நான் அஜித் சாரின் தீவிர ரசிகன். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்கிற தலைப்பை சொன்னதே அவர்தான். நம்ம எல்லோருக்குள்ளும் குட், பேட், அக்லி என 3 குணங்கள் இருக்கும். அது வெளிவர சமயம் பார்த்து காத்திருக்கும். எந்த நேரம் எப்படி வெளிவரும் என்பதுதான் முக்கியம். அதுதான் இந்த படம். உலகம் ‘குட்’டா இருக்கும்போது நாமும் குட்டாக இருக்கலாம். ஆனால், உலகம் ‘பேட்’ ஆக இருந்தால் நாமும் அக்லி ஆகத்தான் இருக்கணும். இதுதான் படத்தோட ஐடியா. இதை வைத்துதான் கதை பயணமாகுது’ என பேசியிருக்கிறார்.

மேலும் ‘அஜித் சாரின் கேரக்டர் எந்த அளவுக்கு மாஸா இருக்குமோ அதே அளவுக்கு எமோஷனல் கலந்தும் இருக்கும். அந்த எமோஷனல் பாயிண்ட்டில்தான் மொத்த கதையும் பயணிக்கும். படம் முழுக்க ஆக்‌ஷனே பண்ணிக்கொண்டிருக்க முடியது. பேமிலி ஆடியன்ஸ் கனெக்ட் ஆக நிறைய இடங்கள் இருக்கிறது. அதோடு, ஒரு அப்பாவுக்கும், பையனுக்குமான பிணைப்பும் படத்தில் இருக்கிறது’ என சொல்லி ஹைப் ஏத்தியிருக்கிறார் ஆதிக். குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது.

Read Entire Article