நிர்வாண காட்சியில் நடித்தது ஏன்? சம்யுக்தா விளக்கம்

15 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ‘சுழல் 2’ வெப்சீரிஸில் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார். இதனால் ரசிகர்களிடையே இந்த காட்சிகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. சிறையில் இருக்கும் சம்யுக்தா, அங்கு பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது போன்றும் காட்சிகள் இருந்தன. சம்யுக்தா விஸ்வநாதன் அந்த காட்சியில் நடித்தது பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். ‘‘இயக்குநர் சர்ஜுன் என்னிடம் அந்த சீனை இப்படித்தான் பண்ணப் போகிறேன் என்றும் உங்களுக்கு கம்ஃபர்டபிளா இல்லை என்றால் சொல்லிவிடுங்கள் மாற்றி விடுகிறேன் என்றார். பெண்கள் சிறைச்சாலை குறித்து ரொம்பவே ராவாக எடுத்துக் கொண்டிருப்பதால், அந்த சீனுக்கும் கதைக்கும் தேவைப்பட்டதால் என்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு அதில் நடித்தேன். வெப்சீரிஸ் பார்த்த பலரும் அந்த காட்சிகள் கதையின் ஓட்டத்துக்கு அவசியமானது என்பதை புரிந்துள்ளார்கள்’’ என்றார்.

Read Entire Article