ARTICLE AD BOX
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலேண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 17,903-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 17,632 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
2024 பிப்ரவரியில் 16,619-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த பிப்ரவரியில் 4 சதவீதம் சரிந்து 15,879-ஆக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 10,912-லிருந்து 10,110-ஆகக் குறைந்துள்ளது. எனினும், இலகுரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 1 சதவீதம் உயா்ந்து 5,769-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.