அசாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கிய மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு

3 days ago
ARTICLE AD BOX

Published : 21 Feb 2025 08:15 AM
Last Updated : 21 Feb 2025 08:15 AM

அசாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கிய மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு

<?php // } ?>

குவாஹாட்டி: அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவத்தில் எஞ்சிய 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.

அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கடந்த ஜனவரி 6-ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இவர்களில் ஜனவரி 8-ம் தேதி ஒருவரின் உடலும் 11-ம் தேதி 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. இப்பணி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்து மீட்புப் பணி மீண்டும் தொடங்கியது. இதில் எஞ்சிய 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதால் அவற்றை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. சுரங்க விபத்தில் இறந்த 9 பேரின் குடும்பத்தினருக்கும் மாநில அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article