ARTICLE AD BOX
ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடும் 32 அணிகளுக்கு மொத்த பரிசுத் தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் ஃபிபா உலககோப்பைக்கா மொத்த தொகை இந்திய மதிப்பில் ரூ.8,700 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், வெற்றிபெறும் அணிகள் மற்றும் யார் யாருக்கு எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும், ஸ்பான்சர்ஷிப் குறித்த ஒப்பந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டித் தொடரை லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட டாஸ்ன் நிறுவனம் இந்தத் தொடருக்கான மொத்தப் போட்டிகளையும் ஒளிபரப்பவிருக்கிறது. டிசம்பரில் தொடங்கும் இந்தத் தொடரில் மொத்தம் 63 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையும் படிக்க: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக முல்டர் சேர்ப்பு!
இந்தத் தொடரில் கோகோ கோலா, பேங்க் ஆஃப் அமெரிக்கா, சீன எலக்ட்ரானிக் நிறுவனம், பெல்ஜிய மதுபான நிறுவனமாக ஏபி இன்பேவ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.
இந்தாண்டுக்கான பரிசுத் தொகை கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஃபிபா தொடருக்கான தொகையைவிட அதிகமாகும். இந்தப் பரிசுத் தொகை அணியின் செயல் திறனைப் பொருத்து வழங்கப்படவுள்ளது. மேலும் கலந்துகொள்ளும் அணிக்கு சுமார் 575 மில்லியன் டாலர்கள் வரை வழங்கப்படவிருக்கிறது.
அமெரிக்காவில் 12 நகரங்களில் நடைபெறும் 63 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை 500 மில்லியன் டாலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: ‘கோல்டன் பேட்’ விருதை வெல்லப் போவது யார்?