மது விற்பனையை அதிகரிக்க யோசித்து, யோசித்து திமுக அரசு செயல்படுகிறது - வானதி குற்றச்சாட்டு

2 hours ago
ARTICLE AD BOX

மது விற்பனையை அதிகரிக்க யோசித்து, யோசித்து திமுக அரசு செயல்படுகிறது - வானதி குற்றச்சாட்டு

Chennai
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

சென்னை: படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு, தற்போது மது விற்பனையை எப்படி அதிகரிக்கலாம் என்று யோசித்து யோசித்து திமுக அரசு செயல்படுகிறது. 1000 புதிய பார்களுக்கு உரிமம் வழங்கும் அனுமதியை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என கூறிவிட்டு, 1000 புதிய பார்களுக்கு உரிமம் வழங்குவதா?பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டுமானால் மது, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

Tasmac DMK Vanathi srinivasan

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அதற்கு நேர் எதிராக மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

படிப்படியாக மதுக்கடைகளை மூடும் வாக்குறுதி என்ன ஆயிற்று என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களும் கேள்வி கேட்க தொடங்கியதால், 500 டாஸ்மாக் மதுக்கடைகளை திமுக அரசு மூடியது. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடியிருக்கும் நேரங்களில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதை திமுக அரசும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை.

இப்படி தமிழ்நாட்டில் எங்கும் மது நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில், அதிகம் மது விற்பனையாகும் இடங்களில், FL2 எனப்படும் சுமார் 1,000 தனியார் பார்களை திறக்க திமுக அரது அனுமதி வழங்கியுள்ளது. இந்த பார்களுக்கு டாஸ்மாக்தான் மதுபானங்களை விநியோகம் செய்கிறது. டாஸ்மாக் செயல்படும் நேரத்தைவிட FL2 பார்கள் செயல்பட கூடுதலாக இரண்டு மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியுரிமை பெற்ற கிளப்புகளின் உறுப்பினர்கள் மது அருந்த மட்டுமே FL2 உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், 1000 பார்களுக்கு FL2 உரிமம் வழங்குவதால், கிளப் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, யார் வேண்டுமானாலும் இந்த பார்களில் மதுபானங்களை வாங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகி விட்டது. இதற்கு டாஸ்மாக் மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களே காரணம். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டுமானால், மது, போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

ஆனால், மது விற்பனை எப்படி அதிகரிக்கலாம் என யோசித்து, யோசித்து திமுக அரசு செயல்படுகிறது. எனவே, 1000 பார்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு 1,000 கடைகளை குறைத்து ஐந்கு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
English summary
The DMK government, which has said it will gradually close liquor shops, is now thinking about how to increase liquor sales. Vanathi Srinivasan has said that the DMK government should cancel the permission to issue licenses to 1000 new bars.
Read Entire Article