ARTICLE AD BOX
ஊட்டி: ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூ மஞ்சூரில் உள்ள ஒரு வீட்டில் பூத்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பிரம்மாவுக்கு உகந்த பூவாக பக்தர்களால் கருதப்படுகிறது. இப்பூவின் தோற்றம் சயன கோலம் மற்றும் பாம்பு படம் எடுத்திருப்பதுபோல இருக்கும். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் பூக்கள் மலரும்.
பூக்கள் மலரும் போது ஏற்படும் நறுமணம் அப்பகுதி முழுவதும் வீசும். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கொட்டர கண்டி பகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி சரவணகுமார் என்பவரது வீட்டில் பிரம்ம கமலம் செடி கடந்த பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்களது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில் நேற்றிரவு இரு மலர்கள் பூத்தது. இதனால் அந்த பகுதியில் நறுமணம் வீசியது. இந்த அரிய வகை பூவை அப்பகுதியை சேர்ந்த பலரும் கண்டு ரசித்தனர்.
The post ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ, மஞ்சூரில் பூத்தது appeared first on Dinakaran.