Zoho ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையிலேயே பணி செய்யலாம்.. ஜாக்பாட் வாய்ப்பு

3 hours ago
ARTICLE AD BOX

Zoho ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையிலேயே பணி செய்யலாம்.. ஜாக்பாட் வாய்ப்பு

Jobs
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யபப்ட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது.

it jobs job jobs

இப்படியான சூழலில் தான் ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விவரம் பின்வருமாறு: ஜோஹோவில் தற்போது ஆண்ட்ராய்டு டெவலப்பர் (Android Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். கோர் ஆண்ட்ராய்டு டெவலப்மென்ட்டை பொறுத்தவரை Kotlin, Android SDK, Android Jetpack Components (Navigation, Room, WorkManager, ViewModel) உள்ளிட்டவற்றில் நல்ல திறமை கொண்டிருக்க வேண்டும்.

கோவையில் பணி.. சென்னையில் நடக்கும் இண்டர்வியூவை மிஸ் செய்யாதீங்க.. அழைக்கும் ZOHO
கோவையில் பணி.. சென்னையில் நடக்கும் இண்டர்வியூவை மிஸ் செய்யாதீங்க.. அழைக்கும் ZOHO

ஏபிஐ இன்டகிரேஷனில் ரெஸ்ட்புல் ஏபிஐஸ் (RESTFUL APIs), Restrofit, Ktor அல்லது OkHttp உள்ளிட்டவற்றை பயன்படுத்தி Asynchronous opertions தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் யூஐ/ஐஎக்ஸ் இன்டகிரேஷனில் எக்எம்எல் (XML) மற்றும் ஜெட்பேக் காம்போஸ் (Jetpack Compose) மற்றும் யூஐ பயன்படுத்தி டிசைனின் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.

ரீஆக்டிவ் புரோகிராமிங்காக Kotlin Coroutines for Asynchoronous programming பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.மேலும் டேட்டாபேஸ் விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும். கோலாபரேட்டிவ் டெவலப்மென்ட்டுக்கான Git, ஆர்க்கிடெக்ச்சர் பேட்டரினல் MVVM, MVP, MVI உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. சென்னை + கோவை உள்பட 10 இடங்களில் பணி! அழைக்கும் ஐடி நிறுவனம்
வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. சென்னை + கோவை உள்பட 10 இடங்களில் பணி! அழைக்கும் ஐடி நிறுவனம்

ரீஅக்டிவ் புரோகிராமிங்கில் Kotlin coroutines தெரிந்திருக்க வேண்டும். 3வது பார்ட்டி லைப்ரேரிஸாக Retrofit, Ktor, Glide, Coil, Firebas மற்றும் பிறவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பற்றி தெரிந்திருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக ஜோஹோ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
English summary
Zoho Jobs 2025: Zoho hiring for Android Developer role in Chennai. Candidates who has 1-4 year experience can apply for this role. Selected candidates will be appointed in Chennai.
Read Entire Article