ARTICLE AD BOX

நாளுக்கு நாள் தங்கம் விலையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தாலும் கூட அதன் விலை உயர்வை பொருட்படுத்தாமல் தங்களால் முயன்ற அளவுக்கு முயற்சித்து சேமிக்க நினைக்கிறார்கள். அதற்கு காரணம் ஆபத்து காலத்தில் முதலீடாக உதவும் என்பதுதான். ஏனெனில் நடுத்தர மக்கள் தங்களுக்கு தேவைப்படும்போது அதை வாங்கி அல்லது தனியார் நிறுவனங்களில் அடகு வைத்து தங்களுக்கு தேவையான பணத்தை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மக்களுடைய இந்த செயல்முறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக ஆர்பிஐ புதிய விதிகளை விதித்துள்ளது.
அதாவது ஆர்பிஐ அமல்படுத்த உள்ள நகைக்கடன் புதிய விதிகளின்படி நகை அடகு கால அவகாசம் முடிந்த பிறகு வட்டியுடன் அத்தனையும் சேர்த்து கட்டி நகைகளை மீட்டு மறுநாளே அடகு வைக்க முடியும். தற்போதைய விதிப்படி வட்டியை மட்டும் கட்டி உடனே மறு அடகு வைக்க முடியும். இந்த நிலையில் இந்த புதிய விதியின்படி நடுத்தர மக்கள் வட்டிக்கு கடன் வாங்கி நகைகளை மீட்டு மறுநாள் அடகு வைக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் வருடம் தோறும் வட்டி மட்டுமே கட்டி நகை கடனை புதுப்பித்து கொள்ளலாம் என்று இருக்கும் மக்களின் எண்ணத்தையும் அவர்களுடைய சேமிப்பையும் இது பாதிக்கும்.