ARTICLE AD BOX
Xiaomi-யின் புதிய கேமரா கிங்.. பிப்.27 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க.. 200MP கேம், 16GB ரேம், IP69 ரேட்டிங்!
இன்னும் விற்பனைக்கே வராத ஆப்பிளின் (Apple) புதிய ஐபோன் 16இ (iPhone 16e) மாடலோடு சேர்த்து ஒட்டுமொத்த ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் (Samsung Galaxy S25 Series) ஆகிய அனைத்திற்கும் பிப்ரவரி 27 ஆம் தேதியன்று ஒரு சிக்கல் முளைக்க உள்ளது. அது ஷாவ்மீயின் புதிய 200எம்பி கேமரா ஸ்மார்ட்போன் (Xiaomi 200MP Camera Smartphone) ஆகும்.
ஒருவழியாக ஷாவ்மீ நிறுவனமானது ஷாவ்மீ அல்ட்ரா 15 (Xiaomi 15 Ultra) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டது. கூடவே சியோமி 15 அல்ட்ராவின் வடிவமைப்பை வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ படங்களையும் வெளியிட்டுள்ளது. ஷாவ்மீ அல்ட்ரா 15 எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது வருகிற பிப்ரவரி 27 அன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு சீனாவில் அறிமுகம் செய்யப்பட (Xiaomi 15 Ultra China Launch) உள்ளது. சீன அறிமுகத்தை தெடர்ந்து மார்ச் 2 ஆம் தேதியன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதோடு ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகமாகும்.
ஷாவ்மீ நிறுவனம் பகிர்ந்துள்ள அதிகாரப்பூர்வ ரெண்டர்களின் (புகைப்படங்கள்) வழியாக ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-டோன் ஃபினிஷுடன் (Dual Tone Finish) வருவதை வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் முந்தைய சியோமி அல்ட்ரா சீரிஸ் ஃபிளாக்ஷிப்களின் கேமரா மாட்யூல்களை போலவே, வட்ட வடிவிலான ரியர் கேமரா யூனிட்டை (Circular Shaped Rear Camera Unit) பேக் செய்கிறது
இந்த ஸ்மார்ட்போனில் கேமரா அமைப்பில் நான்கு சென்சார்கள் (4 Camera Sensors) மற்றும் எல்இடி ஃபிளாஷ் (LED Flash) ஸ்ட்ரிப் ஆகியவை பார்க்க முடிகிறது. இந்த செட்டப் முழுவதும் லைக்கா (Leica) பிராண்டிங்கின் கீழ் வரும். பேக் பேனலின் மேல் வலது மூலையில் 'அல்ட்ரா' என்கிற பிராண்டிங்கை (Ultra Branding) காண முடிகிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உடன் வரலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது 16ஜிபி ரேம் மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa-core Snapdragon 8 Elite) சிப்செட் உடன் வரலாம்.
கேமராக்களை பொறுத்தவரை இது 50-மெகாபிக்சல் 1-இன்ச் டைப் சோனி LYT-900 சென்சார் + 50-மெகாபிக்சல் சாம்சங் ISOCELL JN5 அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 50-மெகாபிக்சல் சோனி IMX858 சாம்சங் ஐஎம்எக்ஸ்858 டெலிஃபோட்டோ 20 சென்சார் + 200எம்பி ப்ரைமரி சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா யூனிட்டை பெறலாம். இது IP68 + IP69 ரேட்டிங்கையும் பெற வாய்ப்புள்ளது.
ஷாவ்மீ 15 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலையை (Xiaomi 15 Ultra Price) பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியாகும் முன் மற்றும் வெளியான பின் என இரண்டாக பிரித்துக்கொள்ளலாம். முன்னதாக இது ரூ.99,990 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது ரூ.1,09,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.36-இன்ச் 8T LTPO டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம்
- 1டிபி வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- லைக்கா-பிராண்டட் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் Summilux லென்ஸ்
- 50 மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 900 சென்சார்
- 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- ஐபி68 ரேட்டிங்
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5400mAh பேட்டரி
- விலை ரூ.78,000 - ரூ.80,000 க்குள் இருக்கலாம்.