கேபிள் TV-க்கு முடிவு கட்டிய Airtel.. 25 OTT, 350 டிவி சேனல், 3.3TB டேட்டா.. அம்பானி ஜி நாங்களும் கொடுப்போம்!

5 hours ago
ARTICLE AD BOX

கேபிள் TV-க்கு முடிவு கட்டிய Airtel.. 25 OTT, 350 டிவி சேனல், 3.3TB டேட்டா.. அம்பானி ஜி நாங்களும் கொடுப்போம்!

News
oi-Muthuraj
| Published: Monday, February 24, 2025, 22:22 [IST]

3 மாதங்களுக்கு வெறும் ரூ.150 என்கிற செலவின் கீழ் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) அறிமுகமானது.. ஏற்கனவே பல கேபிள் டிவி கனெக்ஷன்களை "கதம்" செய்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் ஏர்டெல் (Airtel) நிறுவனமும் தன் பங்கிற்கு என்ன முடியுமோ அதை செய்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பிராட்பேண்ட் சேவை வழங்குநர் ஆன ஏர்டெல் அதன் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் சேவைகளை கிட்டத்தட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் வழங்குகிறது. வெறுமனே டேட்டா நன்மைகளை மட்டுமே வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியாது என்பத்தை ஏர்டெல் நிறுவனம் நன்கு அறியும்.

கேபிள் TVக்கு முடிவு கட்டிய Airtel.. 25 OTT, 350 டிவி சேனல், 3.3TB!

இதன் விளைவாகவே ஏர்டெல் வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது வாடிக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு நன்மைகளையும் சேர்த்து வழங்குகிறது. சுவாரசியமாக இந்நிறுவனம் ஓடிடி நன்மைகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை. டிடிஎச் சேவையையும் சேர்த்தே வழங்குகிறது. அப்படியான ஒரு திட்டம் தான் பார்தி ஏர்டெல்லின் ரூ.599 பிராட்பேண்ட் திட்டம்

பார்தி ஏர்டெல்லின் ரூ.599 பிராட்பேண்ட் திட்டம் நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே அணுக கிடைக்கிறது. இந்த திட்டம் இருக்கும் பகுதியில் வசிக்கும் அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருந்தால்.. உங்கள் வீட்டில் கேபிள் டிவி கனெக்ஷன் இருந்தால்.. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பறி அறிந்துகொண்ட பின்னர்.. கேபிள் டிவியை தொடரலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஏர்டெல் வழங்கும் ரூ.599 திட்டமானது 30 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடை வழங்குகிறது. இதன்கீழ் 3.3டிபி அல்லது 3300ஜிபி வரை மாதாந்திர டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் 350+ டிவி சேனல்களுக்கான அணுகல்களும் கிடைக்கும். ஏர்டெல்லில் இருந்து செட்-டாப் பாக்ஸ் பெற, நீங்கள் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின்கீழ் 25 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்கள் கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடிவு செய்தால், இந்த திட்டத்துடன் நிறுவல் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவையை வழங்காத பகுதிகளில், இந்நிறுவனம் ஏர்ஃபைபரை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும்

எந்தெந்த ஏர்டெல் திட்டங்களின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும்? இந்த பட்டியலில் முதலில் இருப்பது ரூ.3999 திட்டமாகும். இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆகும். தற்போது இந்த திட்டம் 365 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது

ரூ.3,999-ன் மற்ற நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, டெய்லி 2.5ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா, அப்பல்லோ 24|7 மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் ஆகியவைகளை 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும்.

இந்த பட்டியலில் உள்ள இரண்டாவது திட்டம் ரூ.1029 ரீசார்ஜ் ஆகும். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, டெய்லி 2ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா, ரிவார்ட்ஸ்மினி சந்தா, அப்பல்லோ 24|7 மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் ஆகியவைகளை 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும். இதுவும் தற்போது 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வுடன் வருகிறது.

கடைசியாக ரூ.398 ரீசார்ஜ் உள்ளது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, டெய்லி 2ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் ஆகியவைகளை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும். இதன்கீழ் 28 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Airtel Rs 599 Broadband Plan With 25 OTT 350 TV Channels is Really a Cable TV Cutter Plan
Read Entire Article