ARTICLE AD BOX
அள்ளி கொடுக்கும் அமேசான்.. 50எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் விவோ ஒய்29 5ஜி (Vivo Y29 5G) தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த விவோ ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்29 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்29 5ஜி போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது, எனவே இந்த போனை ரூ.11,999 விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்29 5ஜி அம்சங்கள் (Vivo Y29 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் விவோ ஒய்29 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு FunTouch OS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக 6.68-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) ஆதரவும் இந்த போனில் உள்ளது. இந்த விவோ போனின் எடை 198 கிராம் ஆகும்.
5ஜி, டூயல் சிம், வைஃபை, புளூடூத் 5.4 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue), டைட்டானியம் கோல்டு (Titanium Gold), டைமண்ட் பிளாக் (Diamond Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
மேலும் 5500mAh பேட்டரி உடன் விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்29 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.