ARTICLE AD BOX
UBER கொண்டு வந்த புது மாற்றம்.. மக்களுக்கு என்ன லாபம்..? Ola-வும் வழிக்கு வருமா..?
இந்தியாவின் பிரதான நகரங்களில் எல்லாம் ஊபர், ஓலா, ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் வாயிலாக நாம் வாடகை ஆட்டோ, இருசக்கர வாகனம் ,கார் உள்ளிட்ட சேவைகளை எளிதாக பயன்படுத்த முடிகிறது.
இதில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக ரேபிடோ உருவாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ரேபிடோவின் சப்ஸ்கிரிப்ஸன் மாடல் தான். ரேபிடோ செயலியை பொறுத்தவரை ஆட்டோ ஓட்டுநர்கள் குறிப்பிட்ட தொகையை சந்தாவாக செலுத்தி கொண்டு வாடிக்கையாளர்களை பெறலாம்.

ஆட்டோ தேடும் வாடிக்கையாளர்களையும் ஆட்டோ ஓட்டுநர்களை இணைக்கும் ஒரு செயலியாக மட்டுமே ரேபிடோ செயல்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் செலுத்தும் மொத்த கட்டணமும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு செல்கிறது.
ஆனால் ஓலா மற்றும் ஊபரில் கமிஷன் மாடல் பின்பற்றப்படுகிறது. இதன்படி ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த தளங்களில் பெறும் ஒவ்வொரு ரைடுக்கும் கமிஷன் செலுத்த வேண்டும். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் கமிஷன் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊபர் நிறுவனமும் தங்கள் செயலியில் ஜீரோ கமிஷன் மாடலை கொண்டு வந்துள்ளது. எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ரேபிடோவில் ஒரு குறிப்பிட்ட தொகையை சந்தவாக செலுத்தி விட்டால் ரைடுகளை பெறலாமோ அதே முறை தான் ஊபரிலும் பின்பற்றப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் இனி சந்தா செலுத்தி ஊபரின் இணைந்து கொள்ளலால்.
ஆட்டோ ஓட்டுநர்கள் எத்தனை ரைடுகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம், அதற்காக எந்த ஒரு கமிஷனையும் ஊபருக்கு செலுத்த வேண்டிய தேவையில்லை. இதனால் பல ஆட்டோ ஓட்டுநர்களும் ஊபரின் சப்ஸ்கிரிப்ஷன் மாடலுக்கு இடம்பெயறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊபர் நிறுவனம் கமிஷன் மாடலில் இருந்து சப்ஸ்கிரிப்சன் மாடலுக்கு பிப்ரவரி 18ஆம் தேதி முதல் மாறி இருப்பதாக அறிவித்துள்ளது.
ஊபர் நிறுவனம் பிப்ரவரி 18ஆம் தேதியிலிருந்து வாடிக்கையாளர்களையும் ஆட்டோ ஓட்டுநர்களையும் இணைக்கும் ஒரு மென்பொருளாக மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் நோட்டிபிகேஷன் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இனி ஊபர் வாலட்டை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டணம் செலுத்த முடியாது என்றும் வாடிக்கையாளர்கள் பயணத்தை முடித்தவுடன் ரொக்கமாகவோ அல்லது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நேரடியாக அவர்களின் யுபிஐ செயலி வாயிலாகவோ பணம் செலுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வாடகை ஆட்டோக்களுக்கான சந்தை போட்டியானதாக மாறிவிட்டதால் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சந்த அடிப்படையிலான மாடலில் ஆட்டோ சேவைகள் வந்திருப்பதால் ஆட்டோ ஓட்டுநர்களின் நடத்தை மற்றும் தரம் குறித்து வாடிக்கையாளர்களால் எந்த ஒரு புகாரையும் கூற முடியாது.