ARTICLE AD BOX
கோடீஸ்வரர்களை அதிகம் கொண்ட நாடாக முன்னேறும் இந்தியா.. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட லிஸ்ட்..!!
உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சொந்த நாடு மற்றும் மற்ற நாடுகளில் பெரிய அளவில் வணிகம் செய்து வருகின்றன. அவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களின் நிறுவனர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக உலக அளவிலான தொழில் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எலோன் மஸ்க் தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார், அடுத்த இடத்தில் அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஆனால் எந்த நாட்டில் அதிகபட்ச பில்லியனர்கள் உள்ளனர் தெரியுமா? 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலின் அடிப்படையில் ஃபோர்ப்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 78 நாடுகளில் இருந்து 2,781 பில்லியனர்களை ஃபோர்ப்ஸ் பதிவு செய்துள்ளது. உலக அளவில் அதிகமான கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகளவில் பணக்காரர்கள் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான்.அன்று முதல் இன்று வரை தனது நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல் இப்போதும் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. இங்கு மொத்தம் 813 பில்லியனர்கள் உள்ளனர், இவர்களின் மொத்த நிகர மதிப்பு 5.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். கடந்த ஆண்டு 735 பில்லியனர்கள் இருந்தனர். உலக பணக்காரர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் 195 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
சீனா: உலகளவில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.உலகின் எந்த ஒரு மூளைக்கு சென்றாலும் அங்கு 'made in china' என்ற வாக்கியத்தை பார்க்காமல் இருக்கமுடியாது.உலகின் மாபெரும் தொழிற்சாலையாக சீனா திகழ்கிறது. ஆனால் இம்முறை சீனாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால் 406 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் 495 பில்லியனர்கள் இருந்தனர். அவர்களின் மொத்த நிகர மதிப்பு 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் ஜாங் ஷான்ஷான் ஆவார், அவரது நிகர மதிப்பு 62.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இந்தியா: 2024ம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 200 பில்லியனர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு அங்கு 169 பில்லியனர்கள் மட்டுமே இருந்தனர். இங்குள்ள பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 954 பில்லியன் அமெரிக்க டாலர்கள். முகேஷ் அம்பானி 116 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் நாட்டின் முதல் பணக்காரர் ஆவார்.
ஜெர்மனி: பொறியியலுக்கு முன்னோடியாக திகழும் நாடு ஜெர்மனி.வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் மிக சிறந்து விளங்குகிறது ஜெர்மனி. 132 பில்லியனர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது, இது முந்தைய ஆண்டு எண்ணிக்கை 126 ஆக இருந்தது. இந்த பில்லியனர்களின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு கடந்த ஆண்டு 585 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 644 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கிளாஸ்-மைக்கேல் குஹ்னே ஜெர்மனியின் பணக்காரர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார், அவரது நிகர மதிப்பு 39.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ரஷ்யா: 5வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் இப்போது 120 பில்லியனர்கள் உள்ளனர், இது முந்தைய ஆண்டில் 105 ஆக இருந்தது, மொத்த நிகர மதிப்பு 537 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு 474 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வாகிட் அலெக்பெரோவ் ரஷ்யாவின் பணக்காரர்களில் ஒருவர், 28.6 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் உள்ளார்.
இத்தாலி: இத்தாலியும் சுற்றுலா இடங்கள் அதிகம் கொண்ட நாடாகும்.சுற்றுலாவாசிகளை அதிகம் ஈர்க்கும் நாடாக இத்தாலி இருக்கின்றது. இத்தாலியில் கடந்த ஆண்டு 64 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை தற்போது 73 ஆக உயர்ந்துள்ளனர். அதனடிப்படையில் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 302 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இது முந்தைய ஆண்டின் 216 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகம். ஜியோவானி ஃபெரெரோ 43.8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் இத்தாலியின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார்.
7வது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 69 பில்லியனர்கள் உள்ளனர், கடந்த ஆண்டு 51 பேருடன் ஒப்பிடும்போது 18 பில்லியனர்கள் அதிகரித்துள்ளது, இவர்களின் மொத்த நிகர மதிப்பு 231 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பிரேசிலின் மிகப் பெரிய பணக்காரர் எட்வர்டோ சவெரின் ஆவார். அவருக்கு 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து உள்ளது.
கனடா: ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, 8வது இடத்தில் உள்ள கனடாவில் இப்போது 67 பில்லியனர்கள் உள்ளனர், இது கடந்த ஆண்டின் மொத்த சொத்து மதிப்பு 63 ஐ விட நான்கு அதிகமாகும், மொத்த சொத்து மதிப்பு 315 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், இது முந்தைய ஆண்டில் 245 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. கனடாவின் மிகப் பெரிய பணக்காரர் டேவிட் தாம்சன் மற்றும் அவரது குடும்பத்தினர், இவர்களின் சொத்து மதிப்பு 67.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
ஹாங்காங்: ஹாங்காங் 67 பில்லியனர்களுடன் பட்டியலில் 9வது இடத்தை உள்ளது. இது முந்தைய ஆண்டு 66 ஆக இருந்தது, மொத்த நிகர மதிப்பு USD330 பில்லியனாக இருந்தது, இது USD350 பில்லியனில் இருந்து குறைந்துள்ளது. லி கா-ஷிங் ஹாங்காங்கின் பணக்கார தனிநபர் என்ற பட்டத்தை வைத்திருக்கிறார், அவரது நிகர மதிப்பு USD37.3 பில்லியனாகும்.
இங்கிலாந்து: ஒரு காலத்தில் பல நாடுகளை அடிமைப்படுத்தி உலகையே ஆண்ட நடக்க இங்கிலாந்து திகழ்ந்தது.உலகில் உள்ள பல நாடுகளின் வளங்களை சுரண்டி எடுத்து சென்றது இங்கிலாந்து.தற்போது கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 55 பில்லியனர்கள் உள்ளனர், இது கடந்த ஆண்டு 52 ஆக இருந்தது. இந்த பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 225 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கிலாந்தின் மிகப் பெரிய பணக்காரர் மைக்கேல் பிளாட் ஆவார், அவரது நிகர மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.