சேலம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... 65,000 பேருக்கு வேலை... அதிலும் 75% பெண்கள்... முழு விவரம் இதோ

3 hours ago
ARTICLE AD BOX
<p style="text-align: justify;">சேலம் மாநகர் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சேலம் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியில் 119 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் சிப்காட் நிறுவனம் மூலம் மேற்கொண்டு வருகிறது. சேலம் மாவட்டம் நெசவாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் நேரடியாக 15 ஆயிரம் பேரும் மறைமுகமாக 50 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு கிடைக்கும். நேரடியாக 15 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பில் 75 சதவீதம் மகளிர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால் ஆண்டிற்கு 7000 கோடி வரை உற்பத்தி செய்யப்படும். இதில் 75 சதவீதம் ஏற்றுமதியும், 25 உள்ளூர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைவதன் மூலம் நிறைய ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளது.&nbsp;</p> <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/24/79cb5896826d502c07835b942c8ed6561740393156894113_original.jpg" alt="" width="720" height="405" /></p> <p style="text-align: justify;">குறிப்பாக, 880 கோடியில் திருமணிமுத்தாறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளது. சேலம் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவுபெறும் என்று கூறினார். மேலும் சேலம் திருமணிமுத்தாற்றில் செல்லும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, தண்ணீர் ஜவுளி பூங்கா பணிகளுக்காக பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் திருமணிமுத்தாறு தூய்மையாகும் என்றார். சேலம் திருமணிமுத்தாறு கழிவுநீரை குழாய் மூலமாக எடுத்துச்சென்று மறுசுழற்சி செய்து ஜவுளி பூங்காவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். கொலுசு உற்பத்தியாளர்களுக்கான கட்டிடம் கட்டப்பட்டு நிறைவுபெறும் நிலையில் உள்ளது.</p> <p style="text-align: justify;">சேலம் என்றாலே உருக்காலை என்ற நினைவு வருவது போன்று, சேலம் என்றாலே ஜவுளி பூங்கா என்று நினைவு வரும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில், ஜவுளி தொழில் சார்ந்த டையிங், வார்ப்பிங், ஆட்டோ லூம், கார்மெண்ட்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் உள்ள ஜவுளி தொழில் நடைபெறும் என்று அனைத்து மக்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார். ஏற்றுமதி வசதிக்காக சேலம் விமான நிலைய விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் சேலம் விமான நிலையத்தின் விரிவாக்க பணி நிறைவு பெற்று ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கூறினார்.</p>
Read Entire Article