ARTICLE AD BOX
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்ட விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய் மக்களுக்கு பிடித்தவர்கள் அரசியலுக்கு வரும் போது ஆதரிப்பவர்கள். ஒரு சிலருக்கு மட்டும் எரிச்சல் வரத்தான் செய்யும். இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் ஒரு பயம், பதற்றம் இல்லாமல், வரும் எதிர்ப்பை எல்லாவற்றையும் இடது கையில் (Left Hand) சமாளித்துக் கொண்டு, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது தவெக. இதுதான் ஒரு கட்சிக்கு மிக முக்கியமான காலக்கட்டம். ஏனென்றால், ஒரு அரசியல் கட்சிக்கு பெரிய பலமே அக்கட்சியின் கட்டமைப்பு தான். அதுதான் அக்கட்சியின் வேர் மாதிரி. ஒரு ஆலமரம் மாதிரி கட்சி வளரவேண்டும் என்றால், அதற்கான வேர்களும், விழுதுகளும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது என பேசினார்.