ARTICLE AD BOX

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும் இந்த நிறுவனம் அதிகமாக கேமிங் விளையாட வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன அம்சங்களை கொண்டு வரவேண்டுமோ அதெல்லாம் தங்களுடைய அடுத்தடுத்த மாடல்களில் கொண்டு வருகிறது. அந்த வகையில் கேமிங் பிரியர்களை இன்னுமே கவரும் வகையில் Neo வகையில் 10-வது மாடலை (iQoo Neo 10R) களமிறக்க திட்டமிட்டுள்ளது.
இந்த போனில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் விலை என்ன என்பது பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்ப்போம்..
சிறப்பு அம்சங்கள்
டிஸ்பிளே : இந்த போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரையில் 6.78 இன்ச் டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது. எனவே, இதன் மூலம் கேம் விளையாடுவதற்கும் படங்கள் பார்ப்பதற்கும் நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.
கேமரா : 50MP பிரதான சென்சார் (Sony, OIS உடன்) வருகிறது என்பதால் சில சமயங்களில் நாம் போட்டோ எடுக்கும்போது அங்கும் இங்கும் நடுங்கினாள் கூட இந்த போன் ஷேக் ஆகாத புகைப்படங்களை எடுத்து கொடுக்க உதவுகிறது.
பேட்டரி : iQoo Neo 10R பேட்டரி வசதியை பொறுத்தவரையில், 6,400MH வசதியை கொண்டுள்ளது. அதைப்போல 80 வாட்டர்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ள காரணத்தால் வேகமாக சார்ஜ் குறையாது. குறைந்தாலும் வேகமாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.
Cooling வசதி : அதிகமாக கேம்கள் விளையாடும்போது நம்மளுடைய போன் சில நேரங்களில் ஹிட் ஆகும். அந்த ஹிட்டை கட்டுப்படுத்தும் விதமாக 6043 மிமீ² நீராவி குளிரூட்டும் வசதி iQoo Neo 10R போனில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, அதிகமாக ஹிட் பிரச்சினை இருக்காது.
அதைப்போல, இந்த போனில் 2000Hz டச் சாம்பிளிங் வசதி உள்ளது. எனவே, கேமிங் விளையாடும்போது ஒவ்வொரு ஸ்வைப்-க்கும் ரெஸ்பான்ஸ் சூப்பர் ஃபாஸ்டாக இருக்கும். தொடர்ச்சியாக 3 மணி நேரங்களுக்கு மேலாக கேமிங் விளையாடினாள் சில போன்கள் ஸ்லோவ் ஆகும்..ஆனால் இந்த போனில் அந்த பிரச்சினை இருக்காது.
விலை பற்றிய விவரம்
iQoo Neo 10R இந்தியாவில் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு கொண்ட அடிப்படை மாடல் ரூ. 29,999 விலையில் அறிமுகமாகலாம் எனவும், 12GB RAM மற்றும் 256GB சேமிப்பு வகையின் விலை ரூ.34,999 என்ற விலையில் அறிமுகம் ஆகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிமுகம் எப்போது?
iQOO Neo 10R இந்தியாவில் மார்ச் 11, 2025 அன்று அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அந்த தேதியில் இந்தியாவில் அறிமுகம் ஆன பிறகு போனின் சிறப்பு அம்சங்கள் யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறதோ அவர்கள் வாங்கிக்கொள்ளலாம். முதல் ஒரு வாரம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வாங்கிக்கொள்ளலாம் அடுத்ததாக 1 வாரங்களுக்கு பிறகு கடைகளில் விற்பனைக்கு வரும்.