Trump vs India: இந்தியா மீது 'ரெசிப்ரோக்கல்' வரி! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு! முழு விவரம்!

3 days ago
ARTICLE AD BOX

இந்தியா மீது ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா அதிக வரிகள் விதிக்கும் நாடு என்று அவர் கடுமையாக சாடினார்.

 இந்தியா மீது 'ரெசிப்ரோக்கல்' வரி! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு! முழு விவரம்!

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் உலக நாடுகளை அலற விட்டு வருகிறார். அமெரிக்கா பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கபோவதாக எச்சரித்துள்ளார். முதற்கட்டமாக கனடா மற்றும் மெக்ஸிகோ இறக்குமதி பொருட்கள் மீது 25% வரி விதிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து இந்தியாவை 'மிகப்பெரிய வரி விதிப்பாளர்' என்று விமர்சனம் செய்த டிரம்ப், ரஷ்யா, சீனா, இந்தியா மீது அதிக வரி விதிக்க உள்ளதாக கூறியிருந்தார்.
 

இந்தியா மீது 'ரெசிப்ரோக்கல்' வரி

இதனைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப், ஐரோப்பிய நாடுகளை கைகழுவி விட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகோர்த்தார். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை மேற்கொள்ள போவதாக தெரிவித்திருந்தார். ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு என்பது மற்ற நாடுகள் அமெரிக்கா பொருட்களுக்கு எந்த வரி விதிக்கிறதோ, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் அமெரிக்கா அவ்வளவு வரி விதிக்கும் என்பதாகும்.

எஃப்.பி.ஐ தலைவர் காஷ் பட்டேலின் காதலி அலெக்சிஸ் வில்கின்ஸ் யாரு? எப்படி சந்திச்சாங்க?

டொனால்ட் டிரம்ப் vs இந்தியா

இந்நிலையில், இந்தியா, சீனா மீது ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு கொண்டு வர உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்ட ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது டிரம்ப் இந்த கருத்துக்களை தெரிவித்தார். இந்தியா, சீனா மீது நாங்கள் விரைவில் பரஸ்பர வரிகளை (ரெசிப்ரோக்கல்) விதிப்போம் - அவர்கள் எங்களிடம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் வசூலிக்கிறோம்'' என்றார்.

மேலும் எலான் மஸ்க், மோடி சந்திப்பு குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், ''"அவர் (எலான் மஸ்க்) இந்தியாவில் வணிகம் செய்ய விரும்புகிறார் என்று நான் கருதுகிறேன். ஆனால் அதிக வரி விதிப்புகள் காரணமாக இந்தியா வணிகம் செய்ய மிகவும் கடினமான இடம். அவர்களிடம் அதிக வரிகள் உள்ளன. அவர் ஒரு நிறுவனத்தை நடத்துவதால், அவர் இதைச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

இந்தியா-அமெரிக்கா

தொடர்ந்து பரஸ்பர வரிகள் (ரெசிப்ரோக்கல்) குறித்து பேசிய டிரம்ப், இந்தியாவின் கடந்தகால வர்த்தகக் கொள்கைகளை எடுத்துரைத்தார். ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் அதிகப்படியான இறக்குமதி வரிகளைத் தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் உற்பத்தி அலகுகளை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்றார்.

''இந்தியா மிகப்பெரிய வரிகளை வசூலிக்கிறது. இந்தியாவில் அதிக வரி விதிப்பு காரணமாக கடந்த காலத்தில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தங்கள் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் விற்க முடியாததை நான் நினைவில் கொள்கிறேன்'' என்று டிரம்ப் தெரிவித்தார். 

இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதி வழங்கியதா அமெரிக்கா? தவறான தகவலை சொன்ன டிரம்ப்! உண்மை இதுதான்!

Read Entire Article