ARTICLE AD BOX
சீரியலில், எப்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு, வில்லி கதாபாத்திரமும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் சீரியலில் மிரட்டும் 5 சன் டிவி வில்லிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

திரைப்படமாக இருந்தாலும் - சீரியலாக இருந்தாலும், வில்லன் - வில்லி கதாபாத்திரம் இருந்தால் தான் அந்த படமும் - சீரியலிலும் முழுமை பெரும். குறிப்பாக, சீரியலில் நடிக்கும் வில்லிகள் திரைப்பட வில்லன்களையே மிஞ்சும் விதத்தில் சமீப காலமாக நடித்து, ரசிகர்களிடம் வாங்கிக்கட்டி கொள்கிறார்கள். உண்மையில் ஒருவரின் மனதில் கோபத்தை தூண்டும் அளவுக்கு மிகவும் எதார்த்தமாக நடிப்பது சீரியல் நடிகர்களின் திறமை என்றே கூறலாம்.
அந்த வகையில் தற்போது, சன் டிவி தொடரில் நடித்து வரும் 5 முரட்டுத்தனமான வில்லிகள் பற்றி பார்ப்போம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கப்பெண்ணே' தொடரில் எந்த அளவுக்கு அன்பு மற்றும் ஆனந்தி ஜோடிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு பவித்ரா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகைக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பும் இருக்கிறது. காரணம் மகேஷ் - ஆனந்தியை காதலிக்கிறார் என்பதற்காக, எந்த ஒரு தப்பும் செய்யாத ஆனந்தியை பல வழிகளில் பழிவாங்கி வருகிறார் பவித்ரா. மேலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை, நேர்த்தியாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு 'எதிர்நீச்சல்' தொடர் முடிவடைந்த நிலையில், இந்த தொடரின் இரண்டாம் பாகம் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' என்கிற பெயரில் துவங்கியது. இதில் தற்போது புதிதாக அறிவுக்கரசி என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ள, காயத்ரி ராணி அனைவரையும் மிரள வைத்து வருகிறார். இவரின் நடிப்பு ஜான்சி ராணி நடிப்பையே மிஞ்சி விட்டது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பேரழகி சீரியலில் கதாநாயகியாக நடித்த, இவர் இந்த சீரியலில் தரமான வில்லியாக மாறி மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'கயல்' சீரியலில், ஆரம்பத்தில் இருந்தே வடிவு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுமங்கலி தான் கொடூரமான வில்லியாக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அவரையே பீட் செய்து விட்டார், ஹீரோ.. எழிலின் அம்மா சிவசங்கரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் (உமா ரியாஸ்). கயலுக்கு எதிராக இவர் போடும் சதி திட்டங்களும், அதனால், இவர் இல்லத்தரசிகள் மத்தியில் வாங்கும் திட்டும் தான், இவரின் சிறந்த நடிப்புக்கான சாட்சி.

சன் டிவியில் சமீபத்தில் துவங்கப்பட்ட அன்னம் சீரியலில், அயலி வெப் தொடர் மூலம் பிரபலமான அபி நக்ஷத்ரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியலில், அன்னத்தின் மாமா மனைவி செண்பகவல்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான், ராஜலட்சுமி. இவர் இந்த தொடரில் கதாநாயகியை மனம் நோகும்படி பேசியே தன்னை ஒரு சிறந்த வில்லி நடிகை என நிரூபித்துள்ளார்.

சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று தான், 'மூன்று முடிச்சு' TRP-ரேட்டிங்கில் மாஸ் காட்டிவரும் இந்த தொடரில், நந்தினியாக நடித்து வரும் (ஸ்வாதி கொண்டேவின்) மாமியார் கதாபாத்திரத்தில் சுந்தரவல்லி வேடத்தில் நடித்து வருபவர் தான் (ப்ரீத்தி). மகன் மீது பாசத்தை பொழிந்தாலும், இவர் மருமகள் நந்தினிக்கு கொடூர மாமியாராகவும், வில்லியாகவும் இருக்கிறார்.