ARTICLE AD BOX
Tirupati: ஆனுவல் லீவே விடலை! அதுக்குள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இத்தனை மணி நேரமா?
திருப்பதி: திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (மார்ச் 14-ஆம் தேதி) 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 31 காத்திருக்கும் அறைகளும் நிரம்பிய நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் மார்ச் 15ஆம் தேதியான நேற்று மொத்தம் 82,580 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 31,905 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 4 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 31 காத்திருக்கும் அறைகளும் நிரம்பிய நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.
- இன்சல்ட் செய்தாரா நயன்தாரா? கடுப்பான மீனா போட்ட பதிவு! தொடங்கியது அடுத்த பிரச்சனை
- 1000 சவரன் தங்கம், உயில் சொத்துகள்.. அன்னை இல்லம் வீட்டு சாப்பாடு.. சிவாஜி அப்பாவுக்கு உதவபோவது யார்
- கதறும் வால் ஸ்ட்ரீட்! அமெரிக்காவே நடுங்குது! அடுத்து இந்தியா, இங்கிலாந்துதான்! டிரம்ப்பால் வந்த வினை
- மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!
- 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் நடக்க போகுது.. உஷார்.. Rich Dad Poor Dad ஆசிரியர் வார்னிங்
- பிறந்தமேனியாக ஜோதிடரை நிற்க வைத்து, பக்கத்தில் நின்ற பெண்.. தங்க நகைகள் வேற.. நம்பவே முடியாத ட்விஸ்ட்
- பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால்.. பதிவு கட்டணம் குறைக்கப்படும்! தமிழக அரசு அறிவிப்பு
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?
- நேரடியாக வங்கி கணக்கிற்கே வரும் ரூ.50000 + ரூ.7000.. பட்ஜெட்டில் தங்கம் அறிவிப்பு.. யாருக்கு பலன்?
- பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ரயில்வே.. வைகை, பல்லவன் எக்ஸ்பிரசில் வந்த மாற்றம்
- பழைய ஓய்வூதிய திட்டம் எங்கே? பட்ஜெட்டால் கடுகடுப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்து என்ன?
- ஆதார் அட்டை வைத்துள்ளோருக்கு அறிவிப்பு.. ஆதார் புதிய பதிவிற்கு விலக்கு! வேலூரில் 7 மையங்களில் அதிரடி