ARTICLE AD BOX
அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் அவரது 69-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது கே.வி.என் புரோடெக்சன் நிறுவனம்.
விஜய்யின் 69-வது படத்திற்கு 'ஜனநாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஹெ.வினோத் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
அரசியலுக்கு புதிதாக வந்திருக்கும் விஜய்யின் தற்போதைய நிலையைப் போலவே, ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. அதாவது வெள்ளை உடை அணிந்திருக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கோஷமிடும் கூட்டத்தில் விஜய் செல்பி எடுப்பதுப்போல இந்தப் போஸ்டர் அமைந்துள்ளது.
இந்தப் படத்தில்அரசியல் இருக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில்...எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் போஸ்டர் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
TVK Vijay Speech in Parandur - ‘என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது’ | Vikatan