TCS New Campus Construction : "சென்னை சிப்காட் வளாகத்தில் 33 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது."

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. கட்டமைப்பு ரீதியாகவும், உற்பத்தியிலும் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. அதேபோன்று தமிழ்நாடு தகவல் நுட்பத்திலும், சிறந்த மாநிலமாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் ஏராளமான, ஐ.டி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக சென்னைக்கு ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதையும் படிங்க: Accident : எமன் இப்படியா வருவான் ; திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்... என்ன நடந்தது?

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)

இந்திய அளவில் முக்கிய ஐடி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் டாடா தனது ஐடி நிறுவனத்தை நிறுவி, பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் சென்னையில், டாடா கன்சல்டன்சியின் ஐடி நிறுவனம் சிறுசேரி சிப்காட்டில் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே பிரம்மாண்ட அலுவலகம் செயல்பட்டு வரும் நிலைய அலுவலகம் மற்றொரு மிகப்பெரிய வளாகத்தை கட்டும் பணியில் டி‌சி.எஸ் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டிசிஎஸ் அலுவலகம்

தொடர்ந்து சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகரித்து வருவதால், பழைய மகாபலிபுரம் சாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் கேளம்பாக்கம் சாலை ஆகிய வழித்தடங்களில், புதிய தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு கட்டுமான நிறுவனங்களும் வளாகங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்ற வளாகங்களுக்கு, சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் இருந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனம் ஏற்கனவே சிறுசேரி பகுதியில் பிரம்மாண்டமான ஐடி நிறுவனம் செயல்பட்டு வரும் அருகில், 876 கோடி மதிப்பீட்டில் புதிய நிறுவனம் கட்டிடத்தை உருவாக்கி வருகிறது. சுமார் 33.4 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த கட்டிடம் அமைய உள்ளது 11 மாடிகள் கொண்ட அமைப்பில் பிரம்மாண்டமாக இந்த ஐடி நிறுவனம் உருவாக உள்ளது. ஒரே நேரத்தில் இந்த அலுவலகத்தில் 25 ஆயிரம் பேர் பணிபுரியும் இடவசதியும் ஏற்படுத்தித் தரப்பட உள்ளது. வாகனம் நிறுத்துவதற்காக நான்கு தளங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப வளாகம் கட்டும் பணிகளில் டி.சி.எஸ் நிறுவனம் தற்போது தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.