Tamannaah: தமன்னா - விஜய் வர்மா 2 ஆண்டுகள் காதல் தோல்வியில் முடிந்ததா..?

12 hours ago
ARTICLE AD BOX

தமிழ் படங்களில் அதிக அளவில் நடித்து வந்த நடிகை தமன்னா பாட்டியா சமீப காலமாக பாலிவுட் மற்றும் வெப்சீரியஸ்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தமிழ் சினிமா பக்கம் அவரை அதிகமாக காணமுடிவதில்லை. கடந்த சில ஆண்டுக்கும் மேலாக நடிகை தமன்னா தன்னுடன் வெப்சீரியஸில் சேர்ந்து நடித்த விஜய் வர்மா என்பவரை காதலித்து வந்தார். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூட செய்திகள் வெளியானது.

திருமணம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்கள் தமன்னாவிடம் கேட்டதற்கு, திருமணத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏன் இல்லை?. நான் இப்போது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணத்திற்கும், நடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் லட்சியம் கொண்டவள். திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து நடிப்பேன்''என்று கூறி இருந்தார்.

Tamannaah: "தமன்னாவுடனான என் பந்தம் அழகானது..!" - காதல் குறித்த சர்ச்சைகளுக்கு விஜய் வர்மா விளக்கம்

விஜய் வர்மாவும், தமன்னாவும் 2023ம் ஆண்டு புத்தாண்டில் முதல் முறையாக ஜோடியாக வெளியுலகிற்கு அறிமுகமானார்கள். அதன் பிறகு அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொண்டனர். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்தனர். கோவாவில் இருவரும் புத்தாண்டை கொண்டாடினர். அதன் பிறகு இருவரும் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். தான் இப்போது மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாக தமன்னா குறிப்பிட்டு இருந்தார்.

நடிகை தமன்னா

ஆனால், என்னவென்று தெரியவில்லை. இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இருவரும் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பே பிரிந்து விட்டதாகவும், பிரிந்துவிட்டாலும் நல்ல நண்பர்களாக தொடர்வது என்று இருவரும் முடிவு செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது. இருவரும் தங்களது நடிப்பில் கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளதாக இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. என்ன காரணத்திற்காக இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது தொடர்பாக இருவரும் கருத்து தெரிவிக்கவில்லை.

Tamannah: "இனி நான் வில்லன் இல்லை. காதலன் மட்டும்தான்!"- தமன்னாவின் காதலர் விஜய் வர்மா

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article