மும்பையில் செட்டிலான நடிகை ஜோதிகா வெப் சீரிஸ் ஒன்றில் சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அந்த காட்சியை பார்த்த சிவகுமார் அவரது மகன் சூர்யாவிற்கு போன் போட்டு கண்டித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அதைப் பற்றி பேசியிருக்கிறார்.

ஜோதிகா இப்போது அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஜோதிகாவின் குடும்பமே மும்பையில் இருக்கும் நிலையில், நாமும் அங்கேயே செட்டிலாகிவிடலாம் என்று அவர் குடும்பத்துடன் மும்பை சென்று அங்கு செட்டிலாகிவிட்டார். சூர்யா, தன்னுடைய 45-ஆவது திரைப்படம், வாடிவாசல் உள்பட ஒரு சில படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் சென்னையில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் தான் ஜோதிகா ஹிந்தியில் நடித்த டப்பா கார்டெல் வெப் தொடர் நேற்று வெளியானது.

தமிழில் நயன்தாரா நடிப்பில் வந்த, கோலமாவு கோகிலா படத்தின் கான்செப்டை தான் வேறு ஒரு கோணத்தில் பல நடிகைகளை வைத்து வெப் சீரிஸாக உருவாக்கி உள்ளனர். இதில் சாப்பாட்டு கேரியலில் சாப்பாடு எடுத்து செல்லும் ரோல் தான் ஜோதிகா நடித்திருந்தார். அந்த சாப்பாட்டு கேரியரில் பிரவுன் சுகர் எடுத்து செல்ல வேண்டும். அதற்காக லோக்கல் பாஷை பேச வேண்டும், சிகரெட் பிடிக்க வேண்டும். இது போன்ற ஒரு காட்சியில் தான் ஜோதிகா நடித்திருக்கிறார். இதற்காக அவர் சிகரெட் பிடித்துள்ளார். எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் சொல்வதை கேட்டு அப்படியே நடித்திருக்கிறார்.

அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை பார்த்த சிவகுமார் அதிர்ச்சியடைந்து சூர்யாவிற்கு போன் போட்டு கண்டித்தாராம். தனிக்குடித்தனம் சென்றால் இப்படி தான் பண்ணுவீங்களா? பணத்துக்காக இப்படிப்பட்ட காட்சிகளில் எல்லாம் நடித்து என் மானத்தை வாங்க வேண்டுமா என்பது போல சூர்யாவை லெப்ட் ரைட் வாங்கி கண்டித்துள்ளார்.

அதாவது சினிமாவில் இப்படியான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சிவகுமாருகு கூட நன்கு தெரியும். அப்படி தெரிந்தும் அவர் அப்படி கேட்கிறார் என்றால் அதற்கு காரணம் சொந்த பந்தங்கள், மற்றும் வேறு யாரோ சிலர் அவரிடம் உங்களது மருமகள் இப்படி நடிக்கிறாராமே என்று ஏத்திவிட்டிருப்பார்கள். அதனால், நம்ம குடும்பம் ஒரு பாரம்பரியமான குடும்பமாச்சே. இப்படியெல்லாம் பேச ஒருவிதமான பயத்துடன் தான் சூர்யாவிற்கு போன் போட்டு கண்டிருத்திருக்கிறார் என்று சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

மேலும், நல்ல மருமகள் கிடைத்திருக்கிறாள். நான் தேடினால் கூட இப்படி ஒரு மருமகள் கிடைத்திருக்க மாட்டாள் என்று ஜோதிகா பற்றி தன்னிடமே பெருமையாக பேசியதாக சபிதா ஜோசப் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.