ARTICLE AD BOX
சென்னை: உடல் நலம் முழுமையாக தேறிய நிலையில் தனது அடுத்த இசை பயணம் குறித்து அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நெஞ்சில் அசவுகரியம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் அடுத்தகட்டமாக தனது தென் அமெரிக்கா இசை பயணத்தை பற்றி எக்ஸ் தள பக்கத்தில் ரஹ்மான் அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 18ம் தேதி தொடங்கும் இசை நிகழ்ச்சி, ஆகஸ்ட் 17ம் ேததி வரை தென் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. உடல் நலம் தேறிய நிலையில் மீண்டும் இசை பயணத்தை தொடங்க உள்ள ரஹ்மானுக்கு, ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.