Summer Tips : கோடையில் பால் கெட்டுப் போகாமல் தடுக்க நச்சுனு நாலு டிப்ஸ்!!

2 hours ago
ARTICLE AD BOX

Keep Milk Fresh In Summer : கோடை காலத்தில் பால் கெட்டுப் போகாமல் இருக்க இந்த வழிகளில் முயற்சி செய்து பாருங்கள். ரொம்பவே உபயோகமாக இருக்கும்.

கோடையில் பால் கெட்டுப் போகாமல் தடுக்க நச்சுனு நாலு டிப்ஸ்!!

கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் கூடவே பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். கூடவே வெப்பத்தால் வீட்டில் இருக்கும் சில உணவுப் பொருட்களும் கெட்டுப்போகும். எனவே அவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அந்த லிஸ்டில் பாலும் உண்டு.

கோடையில் பால் கெட்டு போனால் என்ன செய்வது?

கோடை காலத்தில் பால் கெட்டுப் போவது என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். எனவே பால் கெட்டுப் போவதை தடுக்க பாலை நன்றாக கொதிக்க வைத்து பிறகு ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்க வேண்டும். இருப்பினும் சில சமயங்களில் இப்படி செய்தால் கூட பால் கெட்டுப் போய்விடும். காரணம் கோடை காலத்தில் ஏற்படும் மின்சார பிரச்சனை தான். இத்தகைய சூழ்நிலையில் பாலை பிரிட்ஜில் வைத்து சேமிப்பதும் கடினம் தான்.

கோடையில் பால் கெட்டு போனால் என்ன செய்வது?

இந்நிலையில் பிரிட்ஜில் வைக்காமல் பால் கெட்டுப் போகாமல் தடுக்க சில குறிப்புகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால் மட்டும் போதும். பால் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.எனவே இப்போது பாலை ஃப்ரிட்ஜில் வைக்காமல், கெட்டுப் போவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாலை நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை கண்டிப்பாக காய்ச்ச வேண்டும். அப்படி காய்ச்சும் போது நீங்கள் 2-3 உரை மட்டுமே கொதிக்க வைத்தால் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.

இதையும் படிங்க:  பச்சிளம் குழந்தைகளை படுக்க வைத்து பால் கொடுத்தால் என்ன நடக்கும்... தாய்மார்களே.!உஷார்..உஷார்.!!

பால் பாத்திரத்தை சுத்தமாக வைக்கவும்

நீங்கள் பாலை காய்ச்சும் பாத்திரத்தை சுத்தமாக கழிவு பயன்படுத்தவும். அதாவது பாலை காய்ச்சும் முன் அந்த பாத்திரம் சுத்தமாக இருக்கிறதா.. இல்லையா என்பதை முதலில் சரி பார்க்கவும். நன்கு சுத்தம் செய்த பிறகு தான் அதில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். அதுபோல பால் காய்ச்சும் முன் பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தண்ணீர் சேர்த்தால் பால் காய்ச்சும் போது பால் அடியில் ஒட்டாமல் தடுக்கப்படும்.

இதையும் படிங்க: அதிக தீயில் வைத்து பாலை கொதிக்க வைக்கிங்களா? இனி இந்த தப்ப செய்யாதீங்க..!!

பாக்கெட் பால்

நகரப்புறங்களில் பாக்கெட் பால் தான் அதிகளவு கிடைக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பாலை சூடு படுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் அதை நீண்ட நேரம் கொதிக்க வைக்க தேவையும் இல்லை. ஏனெனில் நிறுவனங்களில் டாக்கிங் செய்வதற்கு முன்பாக பாலை நன்கு சுத்தப்படுத்துகின்றனர் இதன் காரணமாக அதில் பாக்டீரியாக்கள் இல்லாமல் பாதுகாக்கப்படும். அதுபோல பாக்கெட் பாலை மீண்டும் சூடு படுத்தினால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறையும். பாக்கெட் பால் வாங்கினால், ஒரு சணல் பையை குளிர்ந்து நீரில் நனைத்து பாக்கெட் பாலை அதைக் கொண்டு போர்த்தி வைக்கவும். இப்படி செய்தால் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை பால் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

Read Entire Article