ARTICLE AD BOX
STR: தனுஷின் NEEK உடன் மோதும் டிராகன்.. இணையத்தில் பத்த வச்ச சிம்பு.. குறுக்கே வந்த Fire பாலாஜி!
சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் நாளை அதாவது, பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தனுஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை இந்தப் படத்துடன் அஸ்வத் மாரிமுத்து இயக்கி, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில், டிராகன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகவுள்ள டிராகன் படம், அவரது இயக்கத்தில் வெளியாகவுள்ள இரண்டாவது படம் ஆகும். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமான ஓ மை கடவுளே ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் டிராகன் படம் வரவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

படத்தின் புக்கிங் தொடங்கி சிறப்பாக சென்று கொண்டுள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் புக்கிங் செய்து வருகிறார்கள். படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 திரைகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. முதல் நாளுக்கான பெரும்பாலான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே 90 சதவீதம் புக் ஆகிவிட்டதால், படக்குழு மகிழ்ச்சியாக உள்ளனர். அடுத்த சில வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால், டிராகன் படத்தின் வசூல் என்பது சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு: டிராகன் படத்தில் சிம்பு லவ் ஃபெயிலியர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் டிராகன் படக்குழுவினருக்கு சிம்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " டிராகன் பிளாக்பஸ்டர் 🐉🔥" என பதிவிட்டு, படக்குழுவினரை டேக் செய்துள்ளார்.

தனுஷ் : சிம்புவின் இந்தப் போஸ்டரைப் பார்த்த சிம்பு ரசிகர்களும், பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களும் இதை அதிகம் ரீ போஸ்ட் செய்து வருகிறார்கள். பலர் கமெண்ட் செக்ஷனில் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, படத்தில் சிம்பு பாடலுக்கு பிரதீப் ரங்கநாதன் எப்படி நடித்துள்ளார் என்பதை பார்க்க ரொம்பவும் ஆவலாக இருப்பதாக ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். சிம்புவின் இந்த டிவீட்டைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் சிலர், தனுஷ் படத்திற்கு எதிராக டிராகன் படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் டிராகன் படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதால், படக்குழுவினருக்கு சிம்பு வாழ்த்து கூறியுள்ளார் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
பாலாஜி: மேலும் கமெண்ட் செக்ஷனில், ஃபயர் படத்தின் நடிகர் பாலாஜி முருகதாஸ், "தலைவா, அப்படியே ஃபயர் படத்திற்கும் ஒரு ட்வீட்" என கமெண்ட் செய்துள்ளார். ஃபயர் படம் கடந்த வாரம் அதாவது கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி காசி என்பவரது வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிப் படமாக மாறியுள்ளது.
