கொலை வெறி பிடித்தும அலையும் நானி... ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான HIT 3 படத்தின் டீசர்!

2 hours ago
ARTICLE AD BOX

கொலை வெறி பிடித்தும அலையும் நானி... ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான HIT 3 படத்தின் டீசர்!

News
oi-Pandidurai Theethaiah
| Published: Monday, February 24, 2025, 15:46 [IST]

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்படுவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார். கடந்தாண்டு வெளியான இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது நடித்துள்ள ஹிட் 3 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னணி ஹீரோ: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நானி, உதவி இயக்குநராக பணிபுரிந்து பின்னர் ஆஸ்தா சம்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நான் ஈ, நேனு லோக்கல், பில்லா ஜமீன்தார், ஜென்டில்மேன் போன்ற படங்கள் கொடுத்த வெற்றி டாப் ஹீரோக்களின் வரிசையில் இடம்பெற்றார்.

Nani hit3 Teaser Srinidhi Shetty

கீர்த்தி சுரேஷின் நண்பன்: நானி தன்னுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுடன் நட்புடன் பழகி வருவது அனைவரும் அறிந்ததுதான். கீர்த்தி சுரேஷ் இவரது குடும்ப நண்பராக மாறி போனார். இருவரும் இணைந்து, நேனு லோக்கல் படத்தில் நடித்தனர். இப்படத்தில் இருந்தே இருவரும் நண்பர்களாக உள்ளனர். சமீபத்திய பேட்டிகளில் கூடகீர்த்தி சுரேஷ் நானி பற்றியும் அவரது குடும்பத்தினரையும் பற்றியும் கூறியது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பங்கேற்ற நானி வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களும் இடம்பெற்றன.

ஆபத்தானவர் நானி: நானி நடித்து வரும் புதிய படமான Hit: The 3rd Case தெலுங்கு படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் போலீஸ் ஆக நானி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. பனி மலைகளில் நானி காரை ஓட்டிசெல்கிறார். அவரை சிலர் துரத்தி வருகின்றனர்.
அப்போது காவல்துறை அதிகாரியிடம், நானி ஆபத்தில் இருக்கிறார் என ஒருவர் சொல்ல, அதற்கு அந்த அதிகாரி, நானியே ஆபத்தானவர் என பில்டப் கொடுக்க சிகரெட் பிடித்துக்கொண்டே கார் ஓட்டும் மாஸ் காட்சிகளுடன் நானி வருகிறார். அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். இப்படம் மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Nani hit3 Teaser Srinidhi Shetty

ஹிட் 3 டீசர்: ரத்தம் தெறிக்க தெறிக்க நடக்கும் கொலைகளும் அதன் பின்னணியில் இருக்கும் வில்லனை துரத்தி பிடிக்கும் போலீஸாக நானி தோன்றுகிறார். ஹிட் 3 படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முரட்டுத்தனமாக போலீஸாக வரும் நானி, உயர் அதிகாரிகள் பேச்சை கேட்காமல் தனக்கு தோன்றியதை செய்யும் அதிகாரியாக வருகிறார். ஏன் இவ்வளவு கோபத்துடன் இருக்கிறார் என்பதற்கான காரணம் படம் வந்தால் தெரியவரும். முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த க்ரைம் த்ரில்லர் ஸ்டோரியாக இப்படம் உள்ளது. நானிக்கு அடுத்த ஹிட் படம் கன்பார்ம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: nani srinidhi shetty நானி
English summary
Nani hit 3 movie Teaser, நானி நடித்துள்ள ஹிட் 3 படத்தின் டீசர் வெளியானது
Read Entire Article