சினிமா பிரபலங்கள் நிறைந்த வீடு என்றால், அது நடிகர் விஜயகுமார் வீடு தான். விஜயகுமார் மட்டுமின்றி அவரது மகன் அருண் விஜய்யும் சினிமாவில் நடித்து வருகிறார். இவர்கள் தவிர வனிதா விஜயகுமார் சினிமாவில் நடித்து வருகிறார். இதே போன்று தான் ஸ்ரீதேவி விஜயகுமாரும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீதேவி விஜயகுமார்... இதன் பின்னர் தமிழில், காதல் வைரல், தித்திக்குதே, பிரியமான தோழி போன்ற பல படங்களில் நடித்தார். பின்னர் சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு தற்போது மகள் ஒருவரும் உள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு ஸ்ரீதேவி மொத்தமாக விலகினாலும், அவ்வப்போது பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஏற்கனவே தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், தற்போது தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

விஜயகுமார் குடும்பத்தில் அனிதா, கவிதா, அருண் விஜய், ப்ரீத்தா, ஸ்ரீதேவி உள்ளிட்ட எல்லோரும் ஒரு ரகம் என்றால் வனிதா விஜயகுமார் தனி ரகம். தனது அப்பா வீட்டிலிருந்து பிரிந்து வந்திருந்தாலும் தனது 2 மகள்களையும் தானாக கவனித்துக் கொண்டார். மகனுக்காக கடைசி வரை போராடி தோற்றார். தற்போது வனிதாவின் மகள், ஜோவிகா மட்டுமே இவருடன் உள்ளார். இளையமகன் ஜெயனித்தா படிப்பு சம்பந்தமாக அவரின் தந்தையிடம் உள்ளார்.

இந்நிலையில் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பேசிய ஸ்ரீதேவி எனக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். அப்படியிருக்கும் போது எப்படி பெற்றோர் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டாய் என பலர் என்னிடம் ஆச்சர்யமாக கேட்டிருக்கிறார்கள். எனக்கு நடிக்க அனுமதி கொடுத்தது அவர்கள் தான். ஒரு வயது வரை நடிக்க சொன்னார்கள். அதன் பிறகு நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்றார்கள். நானும் ஓகே என்று சொல்லிவிட்டு நடித்தேன். அப்பா என்ன சொன்னாலும் மறுபேச்சே கிடையாது.

எப்படியும் கல்யாணம் செய்து வைப்பார்கள் என்று தெரியும். அதனால், நானும் திருமணத்திற்கு தயாராகத்தான் இருந்தேன். அதே போல் திருமணம் செய்து வைத்துவிட்டனர். கடவுள் புண்ணியத்தில் என்கணவர் மிகவும் நல்லவராகவும், எப்போதும் என் ஆசைக்கு துணை நிற்பவராகவும் உள்ளார் அதில் நான் அதிஷ்டசாலி என தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி இப்படி கூறியுள்ளது, வனிதாவை விமர்சிக்கும் விதத்தில் உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.