ARTICLE AD BOX
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நம்பிக்கை துரோகியா? பிஸ்மி சொல்வதைப் பார்த்தால் தலையே சுத்துது!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது டாப் கியரில் பறந்து கொண்டு உள்ள நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். இவரது அமரன் படம் ஹிட் ஆன பின்னர், கமிட் ஆன படங்கள் ரிலீஸ் ஆக உள்ள படங்கள் என அனைத்தும் அவரை மாபெரும் நடிகராக மாற்றி வருகிறது. குறிப்பாக பராசக்தி என்ற படத்தில் அவர் கமிட் ஆன பின்னர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கோ சென்றுவிட்டது. அவர் குறித்த பாசிடிவ்வான விஷயங்கள் இப்படி இருக்க, சிவகார்த்திகேயன் ஒரு தயாரிப்பாளரை ஏமாற்றி விட்டார் என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது குறித்து காணலாம்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் பிரதீப் ரங்கநாதன் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது சிவகார்த்திகேயன் குறித்து பேசினார். பிஸ்மி பேசும்போது, " ஆன் ஸ்க்ரீனில் பிரதீப் ரங்கநாதன் தனுஷை போல் உள்ளார். ஆனால், ஆஃப் ஸ்க்ரீனில் அவர் சிவகார்த்திகேயனை போல் நடந்து கொள்கிறார். தனது உழைப்பால் மக்கள் ஆதரவைப் பெற்று படம் ஓட வேண்டும் என்பது ஒரு ரகம். ஆனால் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவார்.

சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிப்பதை கடந்து நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டு உள்ளார். இந்தக் கருத்து எனக்கு நீண்ட காலமாக உள்ளது. நான் பார்த்த காலத்தில் இருந்து இதுவரை மாறவேயில்லை. முன்பை விட ஆஃப் ஸ்க்ரீனில் பிரமாதமாக நடித்துக் கொண்டு உள்ளார். சிவகார்த்திகேயனை மிக நெருக்கமாக பார்த்துள்ளேன். அவரது குணம், சுபாவம் எல்லாம் எனக்குத் தெரியும். அவருடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் கூறிய சம்பவங்கள் தெரியும். ஆனால் அவற்றையெல்லாம் வெளியே சொல்ல முடியாது. தனது குணாதிசயத்திற்கு முற்றிலும் மாறாக உள்ளார். மேலும் மேடைகளில் அவர் சிந்தும் கண்ணீர் அனைத்தும் பொய்யானவை.

சிவகார்த்திகேயன்: அமரன் படத்தின் வெற்றி விழாவில், அவரது சம்பளத்தை பிடுங்கிக் கொள்ள ஒரு கூட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையில் இவர்தான் மற்றவர்கள் மீது தன்னுடைய கடனைச் சுமத்தினார். இவருடன் இருந்த ஆர்.டி. ராஜா என்பவரை பினாமியாக வைத்து, தனது படங்களை தயாரிக்கிறார். அனைத்து படங்களும் படுதோல்வியைச் சந்திக்கின்றன. இதனால், ரூபாய் 75 கோடிகள் கடனாளியாக மாறுகிறார், ஆர்.டி. ராஜா. இப்படியான நிலையில், ஆர்.டி. ராஜாவை கொஞ்சம் ஒதுக்கி வைக்கிறார். ஆனால் அவர், இந்தக் கடனே உன்னால் தான் வந்தது எனக் கூற, சிவகார்த்திகேயன் கடனை நானே ஏற்றுக் கொள்கிறேன் என முடிவெடுக்கிறார்.

75 கோடிகள் கடன்: தான் சம்பாதித்து இந்தக் கடனை அடைக்க அவர் முயற்சி செய்யவில்லை. எனவே, யார் இந்த 75 கோடிகள் கடனை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு மூன்று படத்திற்கான கால்ஷீட் கொடுப்பதாக கூறுகிறார். அப்போதுதான் கே.ஜே.ஆர். ராஜேஷ் என்பவர் உள்ளே வருகிறார். அவர் 75 கோடிகள் கடனை நான் அடைத்து விடுகிறேன், உங்களின் மூன்று படங்களின் கால்ஷீட்டை எனக்கு கொடுங்கள் எனக் கூறுகிறார். இதனால் அந்த 75 கோடிகள் கடனை அவர் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் மூன்று படங்களுக்கு கால்ஷீட் தருவதாக கூறி கொண்டு, இரண்டு படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனால் கே.ஜே.ஆர். ராஜேஷ் படத் தயாரிப்பில் இருந்து முழுவதும் விலகி நிற்கிறார்" எனக் கூறியுள்ளார்.

நம்பிக்கை துரோகம்: இவரது இந்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்களும் இணையவாசிகளும் சிலர், தனது கடனை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளருக்கு சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாரே எனவும், எதிர்காலத்தில் மூன்றாவது படத்திற்கான கால்ஷீட்டை கொடுப்பார் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.