ARTICLE AD BOX
ரஜினிகாந்த் கடைப்பிடிக்கும் டயட் என்ன தெரியுமா?.. அட இதுதான் அந்த சீக்ரெட்டா.. செம உஷார்
சென்னை: ரஜினிகாந்த் கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார்.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக அரசல் புரசலாக தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
சூப்பர் ஸ்டார் நாற்காலியில் பல வருடங்களாக அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அந்த நாற்காலி அவருக்கானது மட்டும்தான் என்பது அவரின் ரசிகர்களுடைய நம்பிக்கை. அதற்கேற்றபடிதான் அவரது கரியர் கிராஃப்பும் இருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே மரண அடி வாங்கின. தோல்வி என்பதோடு மட்டுமில்லாமல் பலரால் கடுமையான ட்ரோலுக்கும் உள்ளாக்கப்பட்டது. இதனால் ரஜினியும் அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட்டானார்கள்.

ஜெயிலர்: அப்படிப்பட்ட சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலக அளவில் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகி தங்கள் தலைவர் எப்போதும் ஃபார்மை இழக்கமாட்டார் என்று கூறினார்கள். ஜெயிலர் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினி. ஆனால் அந்தப் படம் சுமாராகத்தான் போனது.
அடுத்த படங்கள்: வேட்டையன் படத்தின் சுமார் வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. கண்டிப்பாக கூலி வசூல் வேட்டை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் அநேகமாக தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடிவேலு வாயில் விரலை விட்டு ஆட்டிய பிரபுதேவா.. தனுஷும் மகனும் என்ன பண்றாங்கனு பாருங்க.. ஆத்தி!
அதேபோல் கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்திலும் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் மாரி செல்வராஜ் சமீபத்தில் அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் அந்தக் கதை பிடித்திருந்தாலும்; நடித்தால் ஏதேனும் சர்ச்சை உருவாகிவிடுமோ என்று யோசித்து அவர் நோ சொல்லிவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. இந்நிலையில் ரஜினி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது ரஜினிகாந்த்துக்கு 73 வயது ஆகிறது. அப்படி இருந்தும் அவர் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பது தொடர்பான சீக்ரெட் வெளியாகியிருக்கிறது. அதன்படி பால், தயிறு, வெண்ணை, சோறு என வெள்ளை நிற உணவுகளை அறவே தவிர்த்துவிடுவாராம். ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறாராம். அதேபோல் நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவைகளை தினமும் செய்துவருகிறாராம்.
நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன்.. அவர் மாதிரிலாம் முடியாது.. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்