ARTICLE AD BOX
விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு நல்ல காலம்தான்.. லைகா எடுத்திருக்கும் முடிவு இதுதானாம்
சென்னை: விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அவர் இயக்கும் முதல் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு படம் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியாமல் இருந்த சூழலில்; தற்போது அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். அவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் ஜேசன் போக்கிரி படத்தின் பாடலில் சில நொடிகளும், வேட்டைக்காரன் படத்தின் பாடலில் சில நொடிகளும் வந்து சென்றார். அதேபோல் சாஷாவோ தெறி படத்தின் க்ளைமேக்ஸில் தோன்றினார். எனவே ஜேசன் சஞ்சய்யும் கண்டிப்பாக சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டது.

வெளிநாட்டில் படிப்பு: பள்ளி படிப்பை தமிழ்நாட்டில் முடித்த அவர் அடுத்ததாக கனடாவுக்கு சென்று சினிமா இயக்கம் சம்பந்தமான படிப்பை படித்து; தான் இயக்குநராகத்தான் ஆகப்போகிறேன் என்பதை உணர்த்தினர். மேலும் ட்ரிக்கர் என்ற குறும்படத்தையும் அவர் இயக்கினார். சூழல் இப்படி இருக்க லைகா நிறுவனத்தின் பேனரில் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப்போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
பிரேம்ஜிக்கு பிறந்தநாள்.. அவரது மனைவி இந்து என்ன செஞ்சிருக்காங்க பாருங்க.. செம கொண்டாட்டம்
சங்கீதாதான் காரணமா?: தனது மகன் இயக்குநராகும் அறிவிப்பு வெளியாகியும் விஜய் இதுவரை வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம் தனது குடும்பத்துடன் அவருக்கு இருந்த பிரச்னைதான் என்று பலரும் பலவாறு பேசினார்கள். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை தனது தந்தையின் பெயரை பயன்படுத்தக்கூடவே கூடாது என்பதில் ஜேசன் முனைப்பாக இருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் லைகாவிடம் ஜேசனுக்காக பேசியதுகூட விஜய்யின் மனைவி சங்கீதாதான் என்றும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சந்தீப் கிஷன் ஹீரோ: இப்படி பல தகவல்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப்போகிறார் என்று சொல்லப்பட்டு பல மாதங்கள் ஆகியும் படத்தின் ஹீரோ யார் என்று யாருக்குமே தெரியவில்லை. மேலும் இந்தப் படம் அவ்வளவுதான் ட்ராப்பாகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது போன்று கடந்த வருடம் ஹீரோ பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
என் மகனுக்கு ஹிந்தி பிடிக்காது.. நஹி அம்மானு சொல்வான்.. ஜோதிகா இப்படியும் சொல்லிருக்காங்களா?
விறுவிறு ஷூட்டிங்: அந்த அறிவிப்பு வீடியோ வெளியானதைத் தொடர்ந்து படம் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும் இந்தியன் 2, விடாமுயற்சி, லால் சலாம் என லைகா தயாரித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததால் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தை அந்நிறுவனம் கைவிட்டதாகவும் ஒரு செய்தி கடந்த சில நாட்களாக பரவியது. ஆனால் தற்போது அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதன்படி படத்தை லைகா நிறுவனம் கைவிடும் எண்ணத்தில் எல்லாம் இல்லையாம். அதுமட்டுமின்றி படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து முடிந்துவிட்டதாகவும்; அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை இலங்கையில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்காக விரைவில் படக்குழு இலங்கைக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.