ஜி.வி பிரகாஷ்

தமிழ் திரையுலகின் மிக பிஸியான இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் ஜி.வி பிரகாஷ். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி பல்வேறு கிளாசிக் பாடல்களை கொடுத்துள்ளார். தற்போது தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜி.வி இசையில் லக்கி பாஸ்கர் , தங்கலான் , அமரன் ஆகிய படங்கள் வெளியாகின. ஒவ்வொரு படத்திலும் ஜி.வி பெயர் சொல்லும் விதமாக ஒரு பாடலாவது அமைந்து விடுகிறது. குறிப்பாக அமரன் படத்தில் மொத்த ஆல்பம் ஹிட் கொடுத்தார்.

ஜி.வி இசையமைக்கும் படங்கள்

சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ஜிவி இசை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது அவர் இசையமைக்கு 100 ஆவது படமாகும் . மேலும் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார். ஜி.வி பிரகாஷ்.

ஒரு பாட்டுக்கு ஆறு மாதம்

பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் ஜி.வி யின் கரியரில் மிக தனித்துவமான ஆல்பமாக அமைந்த படம் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன். ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்த ஜிவி யின் இந்த படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை கொடுத்தார் செல்வா. ஒட்டுமொத்த திரையுலகமே மிரண்டு போகும் படி தனது திறமையை காட்டினார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜி,வி பிரகாஷ் இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசினார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற 'தாய் திண்ட மண்ணே ' ஒரு பாடலுக்கு இசையமைக்க ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டதாக கூறினார். இந்த ஒரு பாட்டில் ஒரே தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் இந்த பாடலுக்கு இசையமைப்பது மிக சவாலானதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன்

செலவராகவன் இயக்கத்தில் கார்த்தி , ரீமா சென் , ஆண்டிரியா ஆகியோர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் தெலுங்கில் ஆகிறது. தமிழிலும் இப்படம் ரீரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது