RCB vs MI: ஆர்சிபி vs மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்.. மேட்ச் எங்கே, எப்போது?-முழு விவரம் உள்ளே

3 days ago
ARTICLE AD BOX

2025 மகளிர் பிரீமியர் லீக் (WPL) நேற்று ஒரு நாள் மேட்ச் எதுவும் நடக்கவில்லை, ஏனெனில் கேரவன் இப்போது குஜராத்தின் வதோதராவில் இருந்து பெங்களூருக்கு நகர்கிறது. WPL இன் பெங்களூரு லெக்கின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) மோதுகின்றன.

WPL 2025 புள்ளிகள் பட்டியலில் RCB அணி இதுவரை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் MI அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்விக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளது.

RCB vs MI மகளிர் பிரீமியர் லீக் 2025 போட்டி எப்போது நடைபெறும்?

RCB vs MI WPL 2025 போட்டி தேதி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் WPL 2025 போட்டி பிப்ரவரி 21 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும்.

RCB vs MI மகளிர் பிரீமியர் லீக் 2025 போட்டி எங்கு நடைபெறும்?

RCB vs MI WPL 2025 போட்டி நடைபெறும் இடம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் WPL 2025 போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

RCB vs MI மகளிர் பிரீமியர் லீக் 2025 போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?

RCB vs MI WPL 2025 போட்டி நேரங்கள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் WPL 2025 போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். 7 மணிக்கு டாஸ் போடப்படும்.

இந்தியாவில் நடைபெறும் RCB vs MI மகளிர் பிரீமியர் லீக் 2025 போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?

RCB vs MI WPL 2025 போட்டி நேரடி ஒளிபரப்பு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் WPL 2025 போட்டி இந்தியாவில் ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புக்குக் கிடைக்கும். இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

RCB உத்தேச பிளேயிங் லெவன்: 

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), டேனியல் வியாட்-ஹாட்ஜ், எலிஸ் பெர்ரி, ரக்வி பிஸ்ட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், ஏக்தா பிஷ்ட், ஜோஷிதா வி.ஜே., ரேணுகா தாக்கூர் சிங்

மும்பை இந்தியன்ஸ் உத்தேச பிளேயிங் லெவன்: யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜி கமாலினி, அமெலியா கெர், சஜீவன் சஜானா, அமன்ஜோத் கவுர், சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், பருணிகா சிசோடியா

Manigandan K T

TwittereMail
மணிகண்டன், முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர். அச்சு ஊடகம், டிஜிட்டல் ஊடகம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் 10+ ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். செய்திகளை மொழிபெயர்ப்பு செய்தல், பயணம், சினிமா, கிரிக்கெட் சார்ந்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், சர்வதேசம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், href= https://tamil.hindustantimes.com/topic/cricket>கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
Read Entire Article