Puducherry Sea Food: புதுச்சேரி கடல் உணவுகளில் பெஸ்ட் வாழை இலை மசாலா மீன் சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ அருமையான ரெசிபி!

4 hours ago
ARTICLE AD BOX

தேவையான பொருள்கள்

2 பெரிய சைஸ் வஞ்சீரம் (அ) வவ்வால் மீன்

ஒரு பெரிய வெங்காயம் 

ஒரு தக்காளி

2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது

1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் 

தேவையான அளவு உப்பு 

சிறிய அளவிலான புளி 

தேவையான அளவு தேங்காய் எண்ணெய் 

2 பெரிய வாழை இலை

செய்முறை

முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து அதன் மேல் பகுதியில் கத்தியால் கீறி வைக்க வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த் தூள், சீரகத் தூள் மற்றும் மற்ற மசலாக்களை போட்டு கிளறி விட வேண்டும். பின்னர் கீறி வைத்துள்ள மீனை இந்த மசாலா தடவி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில்  தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில்  கடுகை போட்டு பொரிய விட வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய  வெங்காயம் சேர்த்து வதக்கவும். மேலும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து மீண்டும் குழையும் வரை வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விட்டு, புளியை கரைத்து ஊற்றி கெட்டியானதும் இறக்கி விட வேண்டும். இப்பொழுது வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் வைக்கவும். அதன் மேல் வறுத்து வைத்துல்லா  மீனை வைக்க வேண்டும். மீண்டும் அதன் மேல் மசாலாவை வைத்து இலையை இறுக்கமாக  மூடி கட்ட வேண்டும். இப்பொழுது தவாவில் மீனுடன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து வாழையிலை சுருங்க வெந்ததும் எடுக்கவும். சுவையான வாழையிலை மசாலா மீன் தயார். கேரள உணவான இது அங்கு பொதியல் மீன் என்று சொல்லுவார்கள்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, 2019 ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆங்கில இலக்கியத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேல் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். இவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், லைப்ஸ்டைல், சினிமா மற்றும் உலகம் தொடர்பான செய்திகளில் தனது பங்களிப்பை அளித்து வருக்கிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article