ARTICLE AD BOX
Published : 06 Mar 2025 04:33 PM
Last Updated : 06 Mar 2025 04:33 PM
உச்ச நீதிமன்ற உத்தரவால் உயிர் பெறுமா பாலாறு? - 30 ஆண்டு பாதிப்பும் பின்புலமும்

வேலூர்: வட தமிழ்நாட்டின் ஜீவநதியான பாலாறு கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதனால், பாலாற்றின் வளம் சீரழிக்கப்பட்டு நஞ்சாக மாறியுள்ளது. முன்னொரு காலத்தில் பாலாற்றால் செழித்தோங்கிய வாழை, கரும்பு, தென்னை, நெல் உற்பத்தி சுருங்கி விவசாயத்தை விவசாயிகள் மறக்கச் செய்து விட்டன.
இது ஒரு வகையிலான திட்டமிட்ட சுற்றுச்சூழல் சீரழிப்பு என்றே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரக்க கூறி வருகின்றனர். இதற் கெல்லாம். செவி கொடுக்காத அரசு இயந்திரத்தை சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
கடந்த ஜன.30-ம் தேதி அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் வேலூர் மாவட்ட (ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்) சுற்றுச் சூழல் கண்காணிப்பு குழு அமைப் பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும், பாலாற்றின் சுற்றுச்சூழலை மறுசீரமைப்பு செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப் பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதையடுத்து, அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியசாகு வெளி யிட்டுள்ள உத்தரவின்படி வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டுள்ளது. ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் உறுப்பினர்களாக தமிழக சுற்றுச்சூழல் துறை அரசு செய லாளர், சுற்றுச்சூழல் துறை கூடுதல் முதன்மை செயலாளர், நகராட்சிகளின் நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர், ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப ஆலோசகர் களாக நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக் குநர், சென்னை அண்ணா பல்கலைக்கழக வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் பொறி யியல் ஆலோசகர் சுகுமார் மற்றும் பாலாறு மாசால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆம்பூரைச் சேர்ந்த வேலூர் மாவட்ட சுற்றுச் சூழல் கண்காணிப்பு குழு செயல் உறுப்பினர் கஜபதி, கிரீன் கேர் அறக்கட்டளையின் செயலாளர் அம்பலூர் அசோகன், வேலூர் மாவட்டம் அகரம்சேரியைச் சேர்ந்த பொன்.பார்த்தசாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டதுடன், குழுவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப் பினர்-செயலாளர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாறு வளம் பாதிப்பு: பாலாற்றின் கரைகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத் தன்மை கொண்ட கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதுடன், மண் வளத்தையும் மொத்தமாக மாற்றிவிட்டது. அத்துடன், பாலாற்றின் கரைகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த கழிவுநீரும் பாலாற்றில் தான் கலக்கிறது. குறிப்பாக, வேலூர் மாநகரில் இருந்து தினசரி சராசரியாக சுமார் 25 லட்சம் லிட்டர் கழிவுநீர் பாலாற்றில் கலந்து நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது.
வேலூர் மாநகராட்சி மட்டுமின்றி, வாணியம்பாடி நகராட்சி, ஆம்பூர் நகராட்சி, பள்ளிகொண்டா பேரூ ராட்சி, ராணிப்பேட்டை நகராட்சி, வாலாஜா நகராட்சிகளின் கழிவுநீரும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் கரைகளில் உள்ள கிராம ஊராட்சிகளின் கழிவுநீரும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாலாற்றில் கலந்து வரு கிறது.
பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் குப்பை கிடங் காகவும் பாலாறு மாறியுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதேபோல், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மட்டுமின்றி பாலாறு பயணிக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அம்பலூர் அசோகன் கூறும்போது, ‘‘பாலாறு பாதிப்பு தொடர்பாக கடந்த 1991-ம் ஆண்டு வேலூர் குடிமக்கள் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுப்பிரமணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 1996-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப் பட்டதில், சுற்றுச்சூழல் பாதிப்பை கணக்கெடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், மாசுபட்ட சுற்றுச் சூழலை மறு சீரமைப்பு செய்ய வும் உத்தரவிட்டது.
அதன்படி, சில தோல் தொழிற்சாலை முதலாளிகள் இழப்பீடு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட பாலாறு வளத்தை மறுசீரமைப்பு செய்யும் திட்டத் தையும் கிடப்பில் போட்டுவிட்டனர். இப்போது, பாலாற்றின் மொத்த வளத்தையும் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதில், தோல் கழிவுகள் கலப்பது, உள்ளாட்சிகளின் கழிவுநீர் கலப்பதுடன், மணல் அள்ளும் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டுள்ள நிலையில் அதன் அறிக்கையை அரசு பின்பற்ற வேண்டும். விரைவில், இந்த குழு கூடி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மார்ச் 6 - 12
- “குளிர்கால சுற்றுலாவுக்கு உத்தராகண்ட் வாருங்கள்” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
- ‘பட்ஜெட் தொடரில் பேசி முடிக்க வேண்டும்’ - கோட்டை நோக்கிய பேரணியில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்
- ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ முதல் அதிநவீன படிப்பகம் வரை: தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட்டில் 71 முக்கிய அம்சங்கள்