
மார்ச் 06, சென்னை (Chennai News): சிங்கிள் அம்மாவாக வேலைக்கும் செல்ல வேண்டும். குழந்தையையும் கவனிக்க வேண்டும், வீட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என பல பொறுப்புகள் இருக்கும். இவைகளிலேயே அதிக நேரம் கவனம் செலுத்துவதாலும், குழந்தையின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதாலும், மனகவலை மற்றும் மனஅழுத்தம் அதிகரிக்கும்.
வேலையில் அதிக கவனம் செலுத்துவதால் குழந்தைகளை சரியாக வளர்க்க முடியவில்லை. அல்லது வீட்டுச் சூழலைக் கவனிப்பதால் வேலையில் அடுத்த படிக்கு செல்ல முடியவில்லை என அதிகம் நினைத்து மன உளைச்சலுக்கு செல்ல நேரிடும். இதனால் வாழ்க்கையில் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் வேலையிடத்தில் அல்லது குழந்தைகளிடம் கோவத்தைக்காட்ட நேரிடும். வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமலும் ஆகிவிடும். இவைகளை எதிர்கொள்ள சிங்களாக குழந்தையை வளர்க்கும் அம்மாக்கள் தங்கள் மனநலத்தை மேம்படுத்த வேண்டும்.
உடல் நலனில் ஆரோக்கியம்:
மன நலத்தை பெரும்பாலும் பாரமரிப்பது உடல் ஆரோக்கியம் தான். உடல் பலவீனமாக இருந்தால், மனதை ஆரோக்கியமாகவும் பாஷிட்டிவாகவும் வைக்கவும் முடியாது. அவசர அவசரமாக சாப்பிடுவது, சரியாக சாப்பிடாமல் இருப்பது உடலை சேர்வடைய வைத்து விடும். இதனால் குழந்தை வளர்ப்பில் கவனம் இல்லாமல் இருக்கும். மேலும் தனியாக இருப்பது போன்ற எண்ணங்களும் வரும். சிங்கள் அம்மாக்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவது மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும். காய்கறிகள் பழங்களை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மேம்படுத்தும். உடற்பயிற்சி, நடனம் என செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். கணவர் இல்லாமல் இருப்பதால் எப்போது சோகமான உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை. மகிழ்ச்சியாகவும் ஒரு சூப்பர் மாம்-ஆகவும் ஜொலிக்க வேண்டும். இது குழந்தைகளும் ஒரு பாஷிட்டிவ் எண்ணங்களை தரும். அப்பா இல்லை என்ற ஏக்கம் இல்லாமலும் இருக்கும். Female Leader: தலைமை தாங்குவதற்கு பெண்களுக்கு தேவையானவை.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
தனிப்பட்ட நேரம்:
தன் வாழ்வை தனக்கென வாழாமல் இருந்தாலே வாழ்க்கையில் சலிப்பு தட்ட துவங்கும். உங்களுக்காகவும் தனிப்பட்ட நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். படிக்க நண்பர்களுடன் வெளியில் செல்ல, போன்றவைகளை செய்ய வேண்டும். தினமும் மகிழ்ச்சியை அலிக்கு விஷயங்களை செய்யலாம். சந்தோஷமான தருணங்களை தினமும் டைரியில் எழுதலாம். இது மனத்திற்கு எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிறருடன் சண்டை இடுவதற்கும், முறையிடுவதற்கும் நேரம் இல்லை. தனிப்பட்ட விஷயங்களுக்கு நேரத்தை செலவிடுங்கள்.
தெளிவான முடிவு:
சிங்கிள் அம்மாக்கள் பெரும்பான்மையானவரும் குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். சரியாக முடிவு எடுப்பதில் அவர்களுக்கு குழப்பம் நிலவி வருகிறது. குழப்பத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். குழப்பமாக இருந்தால் அக்கறை உடையவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். எது உங்கள் மற்றும் குழந்தையின் எதிர்காலத்திற்கு நன்மை செய்கிறது எனக் கருதி முடிவெடுங்கள். மேலும் குழந்தை விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு தெளிவான மனநிலை அவசியம். மன அமைதியை பெற தியானம், யோக, அல்லது கடவுளிடம் வேண்டுவது அல்லது தூங்கி எழுந்ததும் ஃப்ரெஷான மைண்டில் முடிவை எடுக்கலாம்.
நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்:
சிங்கள் அம்மாக்களாக இருப்பவர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு சிறந்த வழி நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது. அதிக பணிச்சுமை, மன அழுத்தத்தைப் போக்க வாரம் அல்லது மாதம் ஒரு முறை தனது நண்பர்களுடன் வெளியில் சென்று வரலாம். நண்பர்களுடன் தனது கவலை பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்த பிரச்சனைகளை எளிதில் கடக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. நல்ல நண்பர்களுடன் செலவிடும் நேரம் பயனுள்ளதாகவே இருக்கும்.
சொந்தங்களின் பிணைப்பு
கணவர் உடன் இல்லாத போது குடும்பத்தினரின் ஆறுதல் அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவைப்படும் ஒன்றாகும். குழந்தையை தனியாகவே வளர்ப்பேன் என்றில்லாமல், இவ்வுலகத்தில் நல்ல அக்கறை கொண்டவர்கள் நமக்காக இருக்கின்றனர் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு விதைக்க வேண்டும். மேலும் அவர்கள், குழந்தை வளர்ப்பதிலும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவதற்கு உதவி புரிவர்.
பணமும் மனமும்
கணவன் இன்றி இருக்கும் பெண்கள் அதிகம் கவலைப்படுவது, குழந்தையை எவ்வாறு படிக்க வைத்து எதிர்காலத்திற்கு நல்ல வழி காட்டுவது என்பதே. உண்மைதான் குழந்தை வளர்ப்பதற்கு பொருளாதாரம் அவசியமான ஒன்றுதான். தற்போதைய காலத்தில் சேமிப்பு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. குழந்தையின் எதிர்காலத்திற்காக கட்டாயம் தனியாளாக குழந்தையை வளர்க்கும் அம்மாக்கள் சேமிப்பை, மேற்கொள்ள வேண்டும். சேம்ப்பு, முதலீடு செய்வது எதிர்காலத்தை பற்றிய கவலையை குறைக்க உதவும்.
குழந்தைகளுடன் விளையாடுங்கள்
குழந்தைகளுடன் நேரம் ஒதுக்க வேண்டும். அதிக வேலை சுமை இருந்தாலும் தினமும் குழந்தைகளுடன் பேசுவது, விளையாடுவது தாய், சேய் இருவருக்குமே மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கூடவே இவர்களுக்குள்ளான பிணைப்பையும் அதிகப்படுத்தும். நல்ல பண்புகளை சொல்லித் தரலாம். வார விடுமுறையில் குழந்தைகளுடன் சமையல் செய்வது, விளையாடுவது, படிப்பது, சந்தைக்கு செல்வது, கார்டன் வீடு அலங்காரம் போன்ற ஆக்டிவிட்டிகளை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். மனம் மிகுந்த சோர்வை உணரும் போதும் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும் போதும் இந்த தருணங்கள் மன அமைதியை தரும்.
விவகாரத்து ஆனவராக இருந்தாலும், கணவரை இழந்தவராக இருந்தாலும் தனியாளாக குழந்தைகளை வளர்ப்பது சவாலானது என்றாலும், அதிலும் ஒருவகையில் குழந்தையை உங்கள் முழு பொறுப்பில் நல்ல குண நலங்களுடன் ஒரு மனிதனாக வளர்க்கும் மன நிறைவு இருக்கும்.