Oscars 2025 Movies OTT: ஆஸ்காரை தட்டித் தூக்கப்போகும் படங்கள்.. எந்த ஓடிடி தளத்தில் உள்ளது தெரியுமா?

3 days ago
ARTICLE AD BOX

Oscars 2025 Movies OTT: ஆஸ்காரை தட்டித் தூக்கப்போகும் படங்கள்.. எந்த ஓடிடி தளத்தில் உள்ளது தெரியுமா?

Awards
oi-Mohanraj Thangavel
| Published: Friday, February 21, 2025, 6:05 [IST]

சென்னை: 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி, அதாவது, இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த படங்களுக்கான விருதுகளை பெறும் பட்டியலில், மொத்தம் 6 படங்கள் உள்ளன. இவை எந்தெந்த ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Emilia Pérez: ஸ்பானிஷ் மொழிப் படமான எமிலியா பெயர்ஸ் படம், இந்த ஆண்டு ஆஸ்காரில் அதிக விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 13 துறைகளில் இந்த படம் நாமினேட் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவைத் தவிர வெளி நாடுகளில் இந்தப் படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்தியாவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது.

Oscars 2025 Oscars OTT Oscars 2025 Movies 2025

Anuja: இயக்குநர்கள் ஆடம் ஜே கிரேவ்ஸ் மற்றும் சுசித்ரா மத்தாய் ஆகியோரின் இயக்கத்தில் உருவான ஒரு ஷார்ட் ஃபிலிம் தான் அனுஜா. இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை கதைக்களமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தாலும், இதற்காக சிறப்புக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.

The Substance: இந்தியாவில் உள்ள பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் சப்டன்ஸ். இந்த படம் ஆஸ்காரில் சிறந்த படம், சிறந்த நடிகை, இயக்குனர், திரைக்கதை, ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் ( தலைமுடி அலங்காரம்) உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் படமும் ஆஸ்கார் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரெண்ட்க்குப் பெறமுடியும். அதாவது பிரத்யேகமாக பணம் கொடுத்து பார்க்கலாம். முபி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது.

Wicked: மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் இந்த விக்ட் படம் நாமினேட் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வாடகைக்கு உள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்த படமாக உள்ளது.

Dune: Part Two: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் ஏற்கனவே வெளியான Dune படத்தின் இரண்டாம் பாகம். 10 ஆயிரங்களில் பூமி எப்படி இருக்கும் மக்களுக்கு இடையே அல்லது கண்டங்களுக்கு கண்டம் மக்கள் உயிர் வாழ என்ன மாதிரியான சவால்களை எல்லாம் எதிர் கொள்கிறார்கள் என்பது கதையாக இருந்தாலும், அதை உருவாக்கிய விதம், அதன் நேர்த்தியான திரைக்கதை என மொத்த படமும் இந்த ஆஸ்காரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Inside Out 2: அனிமேஷன் படமான இந்த படத்தில், ஒரு இளம் பெண்ணின் உணர்வுகளை ஆசைகளை கேள்விகளை குறும்புத்தனத்தை படமாக எடுத்துள்ளார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Oscars 2025 Movies The Substance,Emilia Pérez, Anuja, Wicked, Inside Out 2, OTT Details
Read Entire Article