ARTICLE AD BOX
நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை (மார்ச் 7) முடிவடையும் நிலையில், இதுவரை எவ்வளவு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பதை இப்போது பார்ப்போம்.
கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 24 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். மேலும் வருடாவருடம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே தேசிய தேர்வு முகமை இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி வரை 15.7 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பம் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கியுள்ளது. மேலும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு மார்ச் 7 ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் நீட் தேர்வு விண்ணப்பம் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சிரமங்கள், சான்றிதழ் பதிவேற்றும்போது ஏற்படும் சிரமங்கள், ஓ.பி.சி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை மார்ச் 1 ஆம் தேதி வரை குறைவாக இருந்ததாக ஆர்.ஜி.ஆர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுவாக கடைசி நேரங்களில் அதிக விண்ணப்பம் வரும். மேலும் ஓ.பி.சி சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது சான்றிதழ்களை பெற்று வருவதால், அவர்களும் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பங்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.