ARTICLE AD BOX
NEEK Movie Twitter Review: தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், படம் குறித்து நெட்டிசன்கள் கூறும் கருத்துகளை இங்கே பார்க்கலாம்
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைவிமர்சனம்: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இன்று செய்தியாளர்களுக்கான சிறப்புக் காட்சி காண்பிக்கப்பட்டது. படம் முடிந்த கையோடு தரப்படும் விமர்சனம் இது. ‘வழக்கமான காதல் கதை தான்’ என்று தனுஷ் ஏற்கனவே சொல்லிவிட்டார் என்பதால், வழக்கத்துக்கு மாறாக எதையாவது எதிர்பார்க்க முடியுமா என்ன? அந்த மைட்செட்டில் தான் நாம் படத்தை பார்க்க வேண்டும்.
காதலில் தொடங்கி காதலில் முடியும்
கதையின் நாயகனாக வரும் பவிஷின் பெற்றோரான சரண்யாவும்- ஆடுகளம் நரேனும் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதற்காக பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. அப்படி ஒரு பெண்ணை பார்க்கும் போது, அது பவிஷ் படித்த கல்லூரியில் படித்த பெண். நாங்கள் நண்பர்கள் என்று அவர்களுக்குள் பேச ஆரம்பித்ததும், ப்ளாஷ்பேக் ஒன்று திறக்கிறது. இருவருக்கும் முன்பு ஒரு காதல் இருப்பதும், அந்த காதல் ஏன் ப்ரேக் ஆனது என்பது தான் அந்த ப்ளாஷ்பேக். ஆனால் ஏன் ப்ரேக் ஆனது என்பதை சொல்ல வேண்டாம் என இருவரும் முடிவு செய்கிறார்கள்.
மேலும் படிக்க | ரக்ஷிதா நடித்த ஃபயர் படத்தின் விமர்சனம் அறிய வேண்டுமா? இதோ இங்கு காணலாம்
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் முதல் பாதி
அது தான் படத்தின் கதையையும், திரைக்கதையும் நகர்த்துகிறது. அதை இன்றைய தலைமுறையின் உரையாடலாக நகர்த்துகிறார்கள். எல்லாம் முடிந்து ஒரு மைண்ட் செட் வரும் போது, தன் முன்னாள் காதலியின் திருமண அழைப்பிதழ் கிடைக்கிறது. அப்போது முன்னாள் காதலனின் மனநிலை எப்படி இருக்கும் என்கிற மனநிலையில், முதல் பாதி நிறைவடைகிறது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இரண்டாம் பாதி
இரண்டாம் பாதியில் முதல் காதலி உடனான காதல் என்ன ஆகிறது? பெற்றோர் பாரத்த பெண்ணின் நிலை என்ன? அவளின் காதல் என்ன ஆனது? என இன்றைய இளசுகளை குறி வைத்து இரண்டாம் பாதியை முடித்திருக்கிறார் தனுஷ். காதல், நட்பு என்கிற இரட்டை குதிரையில் இன்பச் சுற்றுலா போக சுயற்சித்திருக்கிறார் தனுஷ். மீண்டும் சொல்கிறோம், இது ஒரு வழக்கமான காதல் கதை தான். அப்படி மட்டுமே இதை அணுக முடியும். அதனால், பெரிதாக எதிர்பார்க்க முடியாது.
ஜி.வி.பிரகாஷின் இசை, கேட்கும் போது எப்படி கவர்ந்ததோ, அதே மாதிரி பார்க்கவும் நன்றாக இருக்கிறது. மேக்கிங் சிறப்பு. கதாநாயகியின் அப்பாவாக வரும் சரத்குமாரின் காட்சிகள் சிறப்பு. ஒரு பணக்கார பெண், ஏழை வீட்டு பையன் காதலித்தால், அந்த தந்தையின் மனது எப்படி இருக்கும்? என்பதை பிரதிபலிக்கிறார் சரத்குமார். கேமியோவாக 10 நிமிடம் வந்தாலும், மனதில் பதிகிறார் சரத்குமார்.
மேலும் படிக்க | மிரட்டி எடுக்கும் சாவா திரைப்படத்தின் விமர்சனம் அறிய வேண்டுமா? இதோ இங்கு படிக்கலாம்
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் விமர்சனம் இது தான்
காதல் சோகத்தை ரொம்ப போட்டு அழுது புலம்பாமல், இன்றைய காதல் பிரிவில் எத்தனை டிகிரி சோகம் இருக்குமோ, அவ்வளவு சோகம் மட்டுமே வைத்திருப்பது ஆறுதல், அளவு. தன்னுடைய படத்தில் தனுஷ் இல்லாமல் எப்படி? அவரும் ஒரு கெளரவ தோற்றத்தில் வந்து போகிறார். இசை, ஒளிப்பதிவு, எடிட் எல்லாம் தேவைக்கு ஏற்ற இடத்தில் இருக்கிறது.
தனுஷ் மேனரிஷத்தை அப்படியே கைப்பற்றி கரையேர முயற்சித்திருக்கிறார் பவிஷ். பல இடங்களில், தனுஷ் நடிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார். ஆனாலும் முகத்தில் பயம் தெரிகிறது. காரணம், உடன் நடித்தவர்கள் ஏற்கனவே பல படங்களில் நடித்த அனுபவம் பெற்றவர்கள் என்பதாலா என்று தெரியவில்லை. ஆனால், கேமரா பயம் பவிஷ் முகத்தில் பளிச்சிடுகிறது.
மேலும் படிக்க | தண்டல் படத்தின் சினிமா விமர்சனம் படிக்க வேண்டுமா? இதோ இங்கு படிக்கலாம்
அனேகாவை, எப்படிப் பார்த்தாலும் குழந்தையாக வந்த உருவம் தான் நினைவுக்கு வருகிறது. மற்றபடி, கதாநாயகியாக ஒட்ட நீண்ட நேரம் எடுக்கிறது. பலருக்கு அது இல்லாமலும் போகலாம். அதுவும் ஒரு குறை தான். பவர் பாண்டி, ராயன் படங்களுடன் ஒப்பிடும் போது, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். படத்தில் என்ன மைனஸ்? அதுவும் தனுஷ் சொன்னது தான், ‘வழக்கமான காதல் கதை’ தான்.

டாபிக்ஸ்