ARTICLE AD BOX

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் வருடம் வெளிவந்து வெற்றி நடைபோட்ட திரைப்படம் புஷ்பா. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகம் வெளியானது. இதில் ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் வசூலில் டபுள் மடங்கு சாதனை படைத்தது. இந்த நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அதாவது, “புஷ்பா படம் மாணவர்களிடையே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கீனமான ஹேர் ஸ்டைல், அநாகரிகமாக பேசுவது என்று மாணவர்கள் புஷ்பா படத்தை பார்த்துதான் கெட்டுப் போய் உள்ளார்கள். படிப்பில் அதிக கவனத்தை செலுத்திவிட்டு ஒழுக்கத்தை கவனிக்க தவறிவிட்டோம். இதெல்லாம் பார்க்கும்போது ஒரு ஆசிரியராக நான் தோற்றது போல் உணர்கிறேன். எந்த சமூக பொறுப்பும் இன்றி அப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.