GV Prakash Kumar: அனிருத் எராவில் நின்னு விளையாடும் ஜி.வி. பிரகாஷ் குமார்.. இத நோட் பண்ணலனா எப்படி?

2 hours ago
ARTICLE AD BOX

GV Prakash Kumar: அனிருத் எராவில் நின்னு விளையாடும் ஜி.வி. பிரகாஷ் குமார்.. இத நோட் பண்ணலனா எப்படி?

News
oi-Mohanraj Thangavel
| Published: Tuesday, February 25, 2025, 13:34 [IST]

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டு இருப்பவர், அனிருத் என பலரும் பதில் அளிக்க கூடும். ஆனால் ஆண்டுக்கு ஒரு படம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் நடிக்கும் மாஸ் கதாநாயகர்கள் படங்களுக்கு இசையமைப்பதாலே, இந்த எராவை அனிருத் எரா என கூறுகிறார்கள். ஆனால், இதே காலகட்டத்தில் தனது இசையால் திரைத்துறையில் சம்பவக்காரனாக மாறி நிற்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார். சமீபகாலமாக திரையிசையில், நின்னு விளையாடியது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்து இசையமைப்பாளராக திரையுலகில் ஜி.வி. பிரகாஷ் குமார் அறிமுகமாகி, கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகரமான மியூசிஷயனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல், பாடகராக, நடிகராகவும் ஜி.வி. ஸ்கோர் செய்து வருகிறார். தான் இசையமைப்பாளராக களமிறங்கிய, காலத்தில் ஏ.ஆர். ரகுமான், யுவன், ஹாரீஸ், தேவா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான காலத்தில் வெயில் படத்தில் வெயிலோடு விளையாடி என்ற பாடலைப் போட்டு, அனைவரையும் கவர்ந்தார்.

GV Prakash kumar Anirudh GV Prakash

தனது முதல் படத்தில் மக்கள் மத்தியில் அவர் ஏற்படுத்திய ஈர்ப்பு இன்றைக்கும் தொடர்ந்து கொண்டே உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 11 படங்கள் வெளியாகி உள்ளது. இதில் 8 படங்கள் தமிழிலும் 2 படங்கள் தெலுங்கிலும் ஒரு படம் இந்தியிலும் வெளியாகி உள்ளது. இதில் பெரிய நடிகர்களின் படங்கள், வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் என எல்லாமே உள்ளது. கடந்த ஆண்டு, பொங்கலுக்கு தமிழில் மட்டும் இரண்டு படங்களும், தீபாவளிக்கு தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும் என வெளியாகியது.

ஜி.வி: தீபாவளிக்கு வெளியான படங்களான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களின் தரமான திரைக்கதையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது ஜி.வி.யின் இசை எனலாம். இது இல்லாமல் இவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இவருக்கு பெரும் பாராட்டைப் பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது தங்கலான். தங்கலான் இசைக்காக ஜி.வி. எடுத்த முயற்சிகள், நவீன உலகில் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

அனிருத்: அனிருத் இசையில் கடந்த ஆண்டு மூன்று படங்கள் வெளியானது. அதில் இரண்டு படங்கள் தமிழில், அதுவும் கமலின் இந்தியன் 2 மற்றும் ரஜினியின் வேட்டையன், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படங்கள் மட்டுமே. இந்த மூன்று படங்களும் பின்னணி இசையில் மற்றும் பாடல்களில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்குரிய வகையிலும் அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

அதிக படங்கள்: ஆனால், பெரிய ஹீரோக்களின் படங்கள், பெரிய பேனர்களின் படங்கள்தான் இசையமைப்பேன் என இல்லாமல், அனைத்து வகை படங்களுக்கும் இசையமைப்பவர் ஜி.வி. அதேநேரத்தில் ஒரு ஆண்டில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். ஆனால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், திரைத்துறையினர் வட்டாரத்திலேயே 'அனிருத் எரா' என்ற சொல்லாடல் உள்ளது. அதற்கு காரணம் அனிருத்தின் இசை ஏற்படுத்தும் தாக்கம் என்றாலும் இந்த அனிருத் எராவில் நின்னு விளாயாடி வருகிறார், ஜி.வி. பிரகாஷ் குமார்.

ஏ.ஆர். ரகுமான்: சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அனிருத்துக்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் ஒரு அறிவுரை கூறினார். அதாவது, அனிருந் கர்நாடக சங்கீதம் எனப்படும் இசையையும் கற்றுக் கொண்டு அதிலும் ஜாம்பவானாக திகழ வேண்டும், எனக் கூறினார். ஆனால் அந்த பேச்சுக்கு எல்லாம், ஜி.வி. பிரகாஷிடம் வேலையே இல்லை எனக் கூறும் அளவிற்கு சம்பவம் செய்து வருகிறார். மாஸ் பி.ஜி.எம்களில் எந்த அளவுக்கு ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கிறாரோ, அதே அளவிற்கு மெலடிகளிலும் மனம் உருக வைக்கிறார். இந்த ஆண்டில் ஏற்கனவே இவரது இசையில் இதுவரை இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. இதில் வணங்கான் படத்திற்கு பாடல்கள் மட்டும் அமைத்துக் கொடுத்தார்.

லைன் அப்: அதேபோல், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில், இவரது இசை மற்றும் பின்னணி இசை பாராட்டுகளை குவித்து வருகிறது. மார்ச் 7 இல் இவரது இசையில், கிங்ஸ்டன் படமும், ஏப்ரல் 10 இல் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அதாவது அஜித்தின் குட் பேட் அக்லி, தனுஷின் இட்லி கடை. அதேபோல் சிவகார்த்திகேயனின் 25 வது படமான பராசக்தி படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர். அது அவரது 100வது படமும் கூட, இப்படி இவரது லைன்-அப்கள் இன்னும் நீள்கிறது. இசையால் உலகை வெல்ல வாழ்த்துகள் ஜி.வி. பிரகாஷ் குமார்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Music Director GV Prakashkumar Produced Good Music Better Than Anirudh
Read Entire Article