ARTICLE AD BOX
அவமானப்பட்டு நிற்கும் ரத்னா.. அதிர்ச்சியில் உறைந்த சண்முகம் - அண்ணா சீரியல்!
சென்னை: இரவாகியும் ரத்னா வீட்டுக்கு வராததால், கனி பயந்து போய், ரத்னாவிற்கு மீண்டும் மீண்டும் போன் செய்து கொண்டே இருக்கிறாள். அப்போது சண்முகம், முத்துப்பாண்டி என அனைவரும் வர, கனி ரத்னா வீட்டுக்கு வரவில்லை என்பதை சொல்லுகிறாள். ரத்னா யாருகிட்டயும் சொல்லாம எங்கேயும் போக மாட்டாளே, எங்கே போய் இருப்பா என்று அனைவரும் பதறுகின்றனர். முத்துப்பாண்டி, எனக்கெனவோ வெங்கடேசன் மேலதான் சந்தேகமா இருக்கு, கூட இருந்துகிட்டு அவன் ஏதாவது பண்ணி இருப்பான் என்று சொல்ல. உடனே சண்முகம், இப்பொழுது நாம் ரத்னாவை கண்டுபிடிப்போம் அதுவரை அமைதியா இரு என்கிறான்.
அனைவரும் ஒரு பக்கம் ரத்னாவை தேடி கிளம்ப, வெங்கடேஷனும் நானும் வருகிறேன் என்று சொல்லி கூடவே வருகிறான். அப்போது, சௌந்தரப்பாண்டி போன் செய்து என்ன வெங்கடேஷ் நான் சொன்னபடி எல்லாம் நடக்குதா.. அப்படியே அவனுங்கள அலையவிடு அதுக்குள்ள நானும், ஊர்காரங்களை கூட்டிக்கிட்டு வருகிறேன் என்று சொல்ல, வெங்கடேஷ் சரி என்கிறான்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், அனைவரும் ரத்னாவை தேடி அலைகின்றனர். இவ்வளவு நேரம் ஆகியும் ரத்னா எங்க போயிருப்பா என தெரியாமல் குழப்பத்தில் இருக்க, வெங்கடேசன் இது தான் சந்தர்ப்பம் என, ரத்னா அந்த அறிவழகன் கூட தான் போய் இருப்பா எனக்கு என்னமோ அப்படித்தான் தோணுது என ஒரு தனது சந்தேகத்தை சொல்ல சண்முகம் அவனை சத்தம் போடுகிறான். பரணி இப்போ சண்டை போடுறத விட ரத்னாவை தேடுறது தான் முக்கியம் என்ற சொல்ல சண்முகம் ரத்னாவை தேடி ஸ்கூலுக்கு வருகிறான்.
பொய் சொன்ன பியூன்: ஸ்கூலுக்கு வரும் சண்முகம் அங்கு இருக்கு பியூனிடம் ரத்னாவை குறித்து விசாரிக்கிறான். ரத்னா மேடம் கடைசியாக வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கும் போது தான் நான் பார்த்தேன். அதன் பிறகு ரத்னா மேடமும் அறிவழகன் சாரும் ரொம்ப நேரமாக பேசிக்கொண்டே இருந்தார்கள் என்று சொல்கிறான். இதை கேட்டு வெங்கடேசன், நான் சொன்னேல்ல, அவ அந்த அறிவழகன் கூடத்தான் போய் இருப்பா என்று புலம்ப சண்முகம் கோவத்தில் கத்துகிறான். அப்போது, பரணி அவர்களை சமாதானப்படுத்துகிறாள்.
அவமானப்பட்டு நிற்கும் ரத்னா: இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி, ரத்னா மற்றும் அறிவழகன் செல்போன் நம்பரை ட்ராக் செய்து அவர்கள் ஸ்கூலில் தான் இருக்கிறார்கள் என்பது தெரியவர, சண்முகம் அந்த கதவை திறக்க போறியா இல்லை என்று கேட்க, காசியை தேடிக்கொண்டு இருக்கிறேன் சார் திறக்கிறேன் என்று சொல்ல வெளியில் இவ்வளவு பிரசச்னை நடந்து கொண்டு இருக்க, இந்த நேரம் ரத்னா மற்றும் அறிவழகன் என இருவருக்கும் மயக்கமும் தெளிந்து விடுகிறது.
இதற்கிடையில் சௌந்தரபாண்டி ஊர் மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி விட ஹெட் மாஸ்டர் உன் கதவை திறந்தது இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து அனைவரும் ரத்னாவை தவறாக புரிந்து கொள்கின்றனர். அதுமட்டுமின்றி அறிவழகனை மரத்தில் கட்டி வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.