ARTICLE AD BOX
மெட்டா நிறுவன தலைவர் மார்க் சக்கர்பெர்க் தன் மனைவியின் பிறந்தநாளில் சர்பரைஸ் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிசில்லா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணமாகி 12 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த மார்க் சக்கர்பெர்க் தன் மனைவியின் 40-வது பிறந்தநாளைக் கோலாகலமாக சமீபத்தில் கொண்டாடி இருக்கிறார். அந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மார்க் சக்கர்பெர்கிற்கு நெருக்கமானவர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

மனைவியின் 40வது பிறந்தநாள் விழாவுக்காக ஸ்பெஷல் பிளான் செய்திருந்த மார்க் சக்கர்பெர்க் கிராமி விருது பெற்ற அமெரிக்கப் பாடகர் பென்சன் பூன் அணிந்ததைப் போல நீல நிறத்தில் ஜம்ப்சூட் அணிந்து அரங்கில் தோன்றியிருக்கிறார். அவரது புதிய தோற்றம் பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, மார்க்கின் மனைவி பிரிஸ்சில்லா கணவரின் வேஷத்தைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்திருக்கிறார். பென்சன் பூன் ஸ்டைலில் பாட்டுப் பாடி நடனமாடி மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...