Maha Shivratri 2025: சிவனாக நடித்துள்ள தமிழ் நடிகர்கள்.. பக்தியும் பரிகாசமும்.. ஒரு சின்ன ரவுண்டப்!

4 hours ago
ARTICLE AD BOX

Maha Shivratri 2025: சிவனாக நடித்துள்ள தமிழ் நடிகர்கள்.. பக்தியும் பரிகாசமும்.. ஒரு சின்ன ரவுண்டப்!

News
oi-Mari S
By
| Published: Wednesday, February 26, 2025, 11:09 [IST]

சென்னை: சமீப காலமாக நாடு முழுவதும் பக்தி சார்ந்த படங்கள் வெளியாகி பான் இந்தியா வெற்றிப் பெற்று வரும் நிலையில், இதையெல்லாம் அந்த காலத்திலேயே தமிழ் சினிமா இயக்குநர்கள் அதிகளவில் எடுத்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவகுமார், ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, வி.கே. ராமசாமி, சாவித்ரி, பத்மினி, லட்சுமி என பல முன்னணி நடிகர்கள் கடவுள் வேடமிட்டு கச்சிதமாக நடித்துள்ளனர்.

ஆத்திகம் ஒரு பக்கம் இருந்தாலும் நாத்திகத்தையும் இங்கே பலர் பின்பற்றி வருவதால், கடவுள் தொடர்பான காட்சிகளை காமெடியாகவும் வைத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க ஆரம்பித்தனர்.

Maha Shivratri 2025 Sivaji Ganesan Rajinikanth 2025

மகா சிவராத்திரி எனும் சிவபெருமானுக்கு உரிய மகத்தான இந்த நாளில் தமிழ் சினிமாவில் சிவன் போல வேடமிட்டு நடித்த நடிகர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

சிவாஜி - திருவிளையாடல்: சிவன் என்றாலே பலருக்கும் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் 1965ம் ஆண்டு வெளியான திருவிளையாடல் படம் தான் நினைவுக்கு வரும். பாகுபலி படத்தில் சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு பிரபாஸ் நடந்துச் செல்வதை எல்லாம் பார்த்து ரசிகர்கள் கூஸ் பம்ப்ஸ் அடைந்தனர். அந்த காலத்தில் சிவாஜி கணேசன் சிவனாக நடத்திய திருவிளையாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே" என அவர் நடிப்பதை எப்போதுமே பார்த்து ரசிக்கலாம்.

Maha Shivratri 2025 Sivaji Ganesan Rajinikanth 2025

ஜெமினி கணேசன் - கந்தன் கருணை: திருவிளையாடல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு 1967ம் ஆண்டு ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான கந்தன் கருணை படத்தில் முருகராக சிவகுமாரும் சிவனாக ஜெமினி கணேசனும் நடித்தனர். திருவிளையாடல் படத்தில் சிவனாக நடித்த சிவாஜி கணேசன் அந்த படத்தில் வீரபாகு கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். டி.ஆர். ரமணா இயக்கத்தில் 1972ம் ஆண்டு வெளியான சக்தி லீலை படத்திலும் ஜெமினி கணேசன் சிவனாக நடித்திருந்தார்.

Maha Shivratri 2025 Sivaji Ganesan Rajinikanth 2025

வி.கே. ராமசாமி - ருத்ரதாண்டவம்: சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்கள் எல்லாம் சிவனாக நடித்து வந்த நேரத்தில் திடீரென வி.கே. ராமசாமி தயாரிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் அவரே சிவனாக நடித்து சமூக கருத்துக்களை பேசியதும் நாகேஷ் உடன் இணைந்து நடத்திய திருவிளையாடலும் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

Maha Shivratri 2025 Sivaji Ganesan Rajinikanth 2025

ரஜினிகாந்த் - உழைப்பாளி: பி. வாசு இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான உழைப்பாளி படத்தில் சிவன் போல வேடமணிந்துக் கொண்டு ரஜினிகாந்த் நடித்த காமெடி காட்சியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. சிவனே பூசாரியிடம் லிப்ட் கேட்டு வண்டியில் செல்லும் காட்சிகள் எல்லாம் காமெடி ரகளையாக அமைந்தது.

Maha Shivratri 2025 Sivaji Ganesan Rajinikanth 2025

கமல்ஹாசன் - பம்மல் கே சம்பந்தம்: ரஜினிகாந்தை போலவே கமல்ஹாசனும் பம்மல் கே. சம்மந்தம் படத்தின் காமெடி காட்சியில் சிவனாக நடித்திருப்பார். பபுல்கம் எல்லாம் விட்டு அவர் நடித்ததற்கு கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் குவிந்தன. அன்பே சிவம் படத்தில் அன்பு தான் சிவம் என அவர் நடத்திய பாடத்தையும் "ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்.. நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்" என பாடியதையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். மகா சிவராத்திரி நாளில் மட்டுமில்லை அனைத்து நாட்களிலும் மற்றவர்களிடத்தில் அன்பை பொழிந்தால் சிவனின் அருள் மட்டுமல்ல அனைத்து கடவுள்களின் அருளும் கிடைக்கும்.

Maha Shivratri 2025 Sivaji Ganesan Rajinikanth 2025

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Maha Shivratri 2025: Sivaji Ganesan to Rajinikanth popular Tamil Actors acted like Shiva in movies: சிவனாக தமிழ் சினிமாவில் நடித்த முன்னணி நடிகர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
Read Entire Article