ARTICLE AD BOX
Shalini Acted In Good Bad Ugly Movie : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் படம், குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்திலும் இதிலும் நடிகர் அஜித் மாறி மாறி நடித்து வந்தார். இந்த நிலையில், இப்படத்தில் ஷாலினியும் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி:
‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் மூலம் பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர், இயக்குநர் என்பதை தாண்டி, நடிகர் அஜித்தின் பெரிய ரசிகர் ஆவார். அவரை வைத்து ஆதிக் இயக்கியிருக்கும் படம்தான், குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியானது.
ஷாலினி கேமியோ?
நாளுக்கு நாள், அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அப்படித்தான், தற்போதும் ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அஜித்தின் காதல் மனைவி ஷாலினி, அவருடன் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஷாலினி, குட் பேட் அக்லி படம் ஸ்பெயினில் படமாக்கப்பட்டு வந்த போது, அங்கு படப்பிடிப்பு தளத்தில் தனது கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Would #Shalini have played a cameo role in this film? pic.twitter.com/Mz2JmjeoFB
— Movie Tamil (@MovieTamil4) February 25, 2025
உண்மையாக இருக்குமா?
நடிகை ஷாலினி, தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் “பேபி ஷாலினியாக” அறியப்பட்டு வந்தார். சிறு வயதில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் அவர், வளர்ந்த பின்பு காதலுக்கு மரியாதை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அமர்க்களம் படத்தில் இவரும் அஜித்தும் ஒன்றாக சேர்ந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக்கொண்டது. தங்கள் ரிலேஷன்ஷிப்பை சீக்ரெட்டாக வைத்துக்கொண்ட இவர்கள் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து கொடுத்து விட்டு அவர் திரையுலகில் இருந்து விலகிவிட்டார்.
கடந்த 23 வருடங்களில் ஷாலினி நேர்காணலுக்காக கூட எந்த சினிமா ஸ்டுடியோவிற்கும் வரவில்லை. இதனால், குட் பேட் அக்லி படத்தில் இவர் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறித்து வெளியாகி இருக்கும் தகவல், வெறும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதே சமயத்தில், ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பெரிய அஜித் ரசிகர் என்பதும் நமக்கு தெரியும். அதிலும் இது அஜித்தை வைத்து அவர் இயக்கும் முதல் படமாகும். எனவே, அவருக்கு ஸ்பெஷலாக தோன்றும் விஷயங்களில் ஒன்றாக இதைவும் ஆதிக் வைத்திருக்கலாம் என்றும் சிலர் பேசிக்கொள்கின்றனர். எது எப்படியிருப்பினும், படம் வெளிவந்த உடனேதான் தெரியும்.
டீசர் எப்போது?
குட் பேட் அக்லி படம் குறித்து நேற்று வெளியான வீடியோவில் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 90 விநாடிகளுக்கு இந்த டீசர் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர். அவர்களின் அதிகபட்ச வேண்டுதலே, இந்த படமாவது அஜித்திற்கு கைகொடுக்க வேண்டும் என்பதுதான். இந்த படத்தில் அஜித் 3 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
மேலும் படிக்க | ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த 32 வயது இளம் நடிகர்!! விஜய்யுடன் நடித்தவர்..
மேலும் படிக்க | குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா லுக்!! பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்களே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ