ARTICLE AD BOX
சிங்கமாக பிறப்பதன் கஷ்டம் அந்த சிங்கங்களுக்கு மட்டுமே தெரியும். பிறக்கும்போது அந்த பிஞ்சு சிங்கத்துக்கு கண்கள் தெரியாது. தாய் சிங்கம் சற்று ஏமாந்தாலும் கழுதைப்புலிகள் அந்தக் குட்டியை தூக்கிச் சென்றுவிடும். இது மட்டுமா... ஒருவேளை அந்தப் பிஞ்சு சிங்கம் பிறந்த நேரத்தில் ஏற்கெனவே இருக்கிற சிங்கத்தலைவனை கொன்று விட்டோ அல்லது அதை விரட்டிவிட்டோ சிங்கக்கூட்டத்துக்கு புதிய தலைவனாகும் வேறோர் ஆண் சிங்கம், தனக்கு போட்டியாக எதிர்காலத்தில் வரக்கூடிய ஆண் குட்டிகளை கொன்று போட்டு விடும். இவ்விரண்டு ஆபத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிங்கக்குட்டிகள் பதினோராவது மாதத்தில் இருந்து வேட்டையாட பழகும். என்றாலும் அதனுடைய இரண்டு வயது வரை அது தன்னைக் காப்பாற்றிக்கொண்டால் மட்டுமே அது தன்னுடைய முழு ஆயுட்காலமான கிட்டத்தட்ட 16 வருடங்கள் வரை கம்பீரமாக வாழ முடியும்.

சிங்கங்கள் குழுவாக வாழ்கிற ஒரு காட்டுயிர். சிங்கக்கூட்டத்தை 'பெருமை' என்று பொருள்படக்கூடிய ஆங்கில வார்த்தையான 'Pride' என்று குறிப்பிடுகிறது விலங்கியல். ஒரு சிங்கக்கூட்டத்தில் இரண்டு அல்லது மூன்று ஆண் சிங்கங்கள், ஐந்தாறு பெண் சிங்கங்கள், சிங்கக்குட்டிகள் என்று சேர்ந்து வாழும். பெண் சிங்கங்கள் தங்கள் கூட்டத்திலேயே தொடர்ந்து இருக்கும். கூட்டத்துக்கு தலைவனாக இருக்கிற ஆண் சிங்கம், தன் கூட்டத்தில் இருக்கிற பிறந்த இளம் பெண் சிங்கங்களுடன் இணை சேராது. அதாவது, தன்னுடைய மகள்களுடன் இணை சேராது.
கானமயில் ஏன் காணாமல் போனது? காட்டுக்குள் சிங்கத்தின் வாழ்க்கை இதுதான்! | சமவெளி - 8மூன்று முதல் நான்கு வயதில் இனப்பெருக்கப் பருவத்துக்கு சிங்கங்கள் வந்து விடும். இந்த காலகட்டத்தில் தங்கள் கூட்டத்தில் பிறந்த ஆண் சிங்கங்களை, பெண் சிங்கங்கள் விரட்டிவிடும். இதற்குக் காரணம், சகோதர உறவுக்குள் இனப்பெருக்கம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இப்படி விரட்டி அடிக்கப்படுகிற இளம் ஆண் சிங்கம் தனக்கான துணையை வேறொரு சிங்கக்கூட்டத்திலிருந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், அது அத்தனை சுலபம் அல்ல. வேறொரு சிங்கக்கூட்டத்தின் தலைவனாக இருக்கிற ஓர் ஆண் சிங்கத்துடன் சண்டையிட்டு ஜெயித்தால் மட்டுமே அந்தக் கூட்டத்தில் இருக்கிற பெண் சிங்கங்களுடன் இணைசேர முடியும். ஒரு வேளை தோற்றுவிட்டால் நாடோடிகளாக காடு முழுக்க அலைந்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். அப்படியே ஓர் ஆண் சிங்கத்தை ஜெயித்து அதன் கூட்டத்தை கைப்பற்றினாலும், அடுத்த நான்கு அல்லது ஐந்து வருடங்களில் வேறொரு இளம் ஆண் சிங்கம் இதை விரட்டி அடித்துவிட்டோ அல்லது கொன்றுவிட்டோ அந்த சிங்கக்கூட்டத்தின் தலைவனாகிவிடும்.

சிங்கங்களின் சமூக அமைப்பின்படி, ஆண் சிங்கங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒருவகை சிங்கம் சிங்கக்கூட்டத்துக்கு தலைமை ஏற்று தன் கூட்டத்தை பாதுகாக்கும். இரண்டாவது வகை, பேச்சுலர் சிங்கங்கள். இந்த ஆண் சிங்கங்கள் அதனுடைய இனப்பெருக்க வயதில் அதனுடைய கூட்டத்திலிருந்து பெண் சிங்கங்களால் விரட்டி விடப்பட்டவை. இந்த ஆண் சிங்கங்கள்தான், சிங்கக்கூட்டத்தின் தலைவனாக இருக்கிற ஓர் ஆண் சிங்கத்தை எதிர்த்து அதைக் கொன்று விட்டோ அல்லது விரட்டி விட்டோ அந்தக் கூட்டத்தின் தலைவனாகிவிடும். மூன்றாவது வகை நாடோடி சிங்கங்கள். இவை தனியாகவே சுற்றித் திரிந்துக்கொண்டிருக்கும். இதற்கு இணை சேர பெண் சிங்கங்கள் கிடைப்பது அரிது.
`ஒரு தலைவன்; 5 தலைவிகள்’ ; குட்டியை மறைக்கும், மாம்பிஞ்சுக்கு ஏங்கும்..! - இது மான்களின் வாழ்க்கைஆண் சிங்கங்களைப் பற்றி பேசும்போது அவற்றின் தங்க நிற பிடரியை பற்றி பேசாமல் இருக்க முடியுமா?
பிறந்த மூன்று முதல் நான்காவது மாதங்களில் பிடரி முடியின் வளர்ச்சி மெதுவாக ஆரம்பிக்கும். ஒன்று முதல் இரண்டு வயதில் இந்தப் பிடரி, சிங்கத்தின் கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றை தொடுகிற அளவுக்கு வளர்ந்து விடும். இருந்தாலும் இது முழுமையான பிடரி வளர்ச்சி கிடையாது. இரண்டு முதல் மூன்றாவது வயதில் கழுத்து, தோள்பட்டை, காது என அனைத்தையும் மறைத்து அடர்த்தியாக பளபளவென கம்பீரமாக ஜொலிக்கும். சிங்கத்தின் பிடரி மூன்றிலிருந்து நான்காவது வயதில் சிங்கத்தின் நெஞ்சையும் மறைத்து பிடரி இன்னும் நீளும். இந்த நேரத்தில் பொன் மஞ்சள் நிறமும், மரக்கிளையின் நிறமும் கலந்த நிறத்தில் இருந்த பிடரியானது, கருமை நிறத்துக்கு மாறத் துவங்கும். இந்த இளம் ஆண் சிங்கம்தான் முதிர்ந்த ஆண் சிங்கங்களுக்கு சவால் கொடுப்பவை. நான்கு வயதுக்கு மேல் அது ஒரு முழு வளர்ச்சியடைந்த ஆண் சிங்கமாக கம்பீரமாக நிற்கும். இந்தப் பிடரியும் கம்பீரமும்தான் ஆண் சிங்கத்தின் இனப்பெருக்க ஈர்ப்பு. பிடரியின் நீளம், பளபளப்பு, அடர்த்தி இந்த மூன்றும் அதன் மரபணு, ஆரோக்கியம், சுற்றுச்சூழல் இந்த மூன்றையும் பொறுத்தது.

ஆராய்ச்சி ஒன்று அடர்த்தியான, கருமையான அடர்ந்த நிறத்தில் பிடரி கொண்ட ஆண் சிங்கங்களுடன் உறவுகொள்ளவே பெண் சிங்கங்கள் விரும்புவதாக தெரிவிக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், ஆண் சிங்கத்தின் பிடரியே அதன் மரபணு வலிமையை காட்டுவதால், அப்படிப்பட்ட ஆண் சிங்கத்துடன் இணை சேர்ந்தால் பிறக்கும் ஆண் சிங்கக்குட்டி வருங்காலத்தில் தன்னுடைய சிங்கக்கூட்டத்தை பத்திரமாக பாதுகாக்கும் என்பதன் அடிப்படையில்தான் பெண் சிங்கங்கள் இந்த ஆண் சிங்கங்களை தேர்ந்தெடுக்கின்றன. ஓர் ஆண் சிங்கத்தின் பிடரி தான் மற்றொரு ஆண் சிங்கத்திற்கு அது எந்த அளவுக்கு வலிமையானது என்பதை தெரிவிக்கிற விஷூவல் சிக்னல்.
Fox: ஒருத்திக்கு ஒருவன்; குடும்ப மொழி; பெளர்ணமி ஊளை; நரிக்கொம்பு... இது குள்ளநரிகளின் கதை!ஆண் சிங்கத்தின் பிடரி அதன் உயிரையும் காப்பாற்றும் என்கிறார்கள் காட்டுயிர் ஆர்வலர்கள். ஒரு சிங்கக்கூட்டத்தை காப்பாற்றுவதற்காகவும், கைப்பற்றுவதற்காகவும் இரண்டு ஆண் சிங்கங்களுக்கிடையே நடைபெறும் போராட்டத்தில் சிங்கங்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை இந்த பிடரி ஏற்படாமல் தடுக்குமாம். சற்று விளக்க வேண்டும் என்றால், இரண்டு சிங்கங்களும் கட்டிப் புரண்டு கழுத்தை கடிக்கும்போது அடர்த்தியான பிடரி கழுத்தில் கடிபடாமலும், அப்படியே பட்டாலும் லேசான காயத்துடன் தப்பித்துக் கொள்ளவும் உதவும்.

ஆண் சிங்கங்கள் வேட்டையாடாது என்பதை முழுக்க உண்மை என்று சொல்ல முடியாது. அது உண்மையே கிடையாது என்று மறுக்கவும் முடியாது. ஏன் தெரியுமா... தன் குடும்பத்தால் விரட்டப்பட்ட ஆண் சிங்கங்களும், நாடோடிகளாக காட்டில் அலைந்துக்கொண்டிருக்கிற ஆண் சிங்கங்களும் நன்றாகவே வேட்டையாடும். வேட்டையாடி உணவு தர இவற்றுக்குத்தான் பெண் சிங்கங்கள் கிடையாதே... அப்படியென்றால், சிங்கக்கூட்டத்தின் தலைவன் வேட்டையாடாதா என்றால், அப்படியும் சொல்லிவிட முடியாது. சிங்கக்கூட்டத்தில் இருக்கிற ஆண் சிங்கங்கள் எந்நேரமும் ஏதோ ஒரு மரத்தடி நிழலில் ஓய்வாக படுத்தபடியே இருக்கும். இப்படி இருப்பதால் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம்கூட ஆண் சிங்கங்கள் தூங்குமாம். அதற்காக ஆண் சிங்கங்களை சோம்பேறி என்றும் குறை சொல்லவும் முடியாது. குடும்பத்துடன் இருக்கிற ஆண் சிங்கங்களின் வேலை, தன் கூட்டத்துக்கான எல்லைகளை கட்டமைத்து பாதுகாப்பது... வேறோர் ஆண் சிங்கம் தன் கூட்டத்தை கைப்பற்றாதபடி எச்சரிக்கையாய் இருப்பது ஆகியவையே...வேறொரு ஆண் சிங்கம் தன் கூட்டத்தை கைப்பற்ற வந்தால் அதனுடன் மூர்க்கமாக சண்டையிட்டு அதை கொல்லவோ அல்லது விரட்டவோ செய்வதற்கான சக்தியை சேமித்து வைப்பதற்காகத்தான் ஆண் சிங்கங்கள் இந்த அளவுக்கு ஓய்வெடுக்கின்றன என்கிறார்கள் காட்டுயிர் ஆர்வலர்கள். ஒருவேளை சிங்கக் கூட்டத்தில் இருக்கிற ஆண் சிங்கங்கள் இப்படிப் போரிட்டு ஜெயிக்கவில்லை என்றால் சிங்கக்கூட்டத்தை கைப்பற்றும் அந்தப் புதிய ஆண் சிங்கம், இந்த சிங்கத்துக்குப் பிறந்த சிங்கக்குட்டிகளை கொன்றுவிடும். தன் கூட்டத்தைக் காப்பாற்ற ஆண் சிங்கங்களுக்கு வலிமை வேண்டும். அந்த வலிமையை தக்க வைக்க எனர்ஜி வேண்டும். அதை சேமித்து வைக்க ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் ஓய்வில் இருக்க, பெண் சிங்கங்கள் வேட்டையாடும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொள்கின்றன.
Elephants: மகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்; மருமகளை ஏற்றுக்கொள்ளாது; தாய்மாமனுக்குப் பெண் கொடுக்காதுசரி, சிங்கக்கூட்டத்தில் இருக்கிற ஆண் சிங்கங்கள் வேட்டையாடவே செய்யாதா என்றால் அப்படி கிடையாது, சிங்கங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி, காட்டெருமை, வரிக்குதிரை, யானை போன்ற தங்களைவிட உயரமான, பெரிதான விலங்குகளை பெண் சிங்கங்கள் வேட்டையாடும்போது ஆண் சிங்கங்களும் உடன் சேர்ந்து கொள்ளும். ஆண் சிங்கங்களுக்கு வேட்டையாடுவதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. அது அதனுடைய கம்பீரமான பிடரி. பெண் சிங்கங்கள் மறைந்திருந்து தங்களுக்கான உணவை வேட்டையாடி விடும். ஆனால், சிங்கத்தின் பிடரி, சிங்கம் மறைந்திருந்தாலும் அதன் வேட்டை உயிர்களின் கண்களில் பட்டுவிடும். பிறகு அது உயிர் தப்ப ஓடிவிட்டால் ஆண் சிங்கத்துக்கு உணவு எது..?

சிங்கக் குட்டிகள் பற்றி பேசியாகிவிட்டது ஆண் சிங்கங்கள்பற்றியும் பேசி விட்டோம். இனி, பெண் சிங்கங்கள்...
தன்னுடைய மூன்று வயதில் பெண் சிங்கங்கள் இனப்பெருக்கத்துக்கு தயாராகும். இந்த காலகட்டத்தில் நாளொன்றுக்கு ஒரு நாளில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் இணையும். சிங்கங்களின் இனப்பெருக்க விகிதம் மிகவும் குறைவு என்பதால்தான் இத்தனை முறை சிங்கங்கள் இணைகின்றன. ஒரு சிங்கக்குட்டி பிறக்க வேண்டும் என்றால், அதன் பெற்றோர் கிட்டத்தட்ட 3 ஆயிரம் முறை உறவுகொள்ள வேண்டும். பெண் சிங்கத்தின் கருத்தரிப்பு காலம் 108 நாட்கள். ஒரு பிரசவத்தில் இரண்டிலிருந்து நான்கு சிங்கக்குட்டிகள் வரை பிறக்கும். மற்ற சிங்கக்கூட்டத்தில் இருக்கிற ஆண் சிங்கங்களால் தன்னுடைய குட்டிகளுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக பெண் சிங்கம் என்ன செய்யும் தெரியுமா?
தன் கூட்டத்தில் இருக்கிற ஆண் சிங்கங்களுடன் மட்டுமல்லாமல், அவை அறியாமல் அடுத்தக் கூட்டத்தில் இருக்கிற மற்ற ஆண் சிங்கங்களுடனும் பெண் சிங்கங்கள் உறவு கொள்ளும். இதனால் வேறு ஓர் ஆண் சிங்கம், ஒரு கூட்டத்தின் தலைவனை கொன்று விட்டாலோ அல்லது விரட்டி விட்டாலோ, அந்தக் கூட்டத்தில் இருக்கிற சிங்கக்குட்டிகளை கொல்லாது. ஏனென்றால், அந்தக்குட்டிகள் தன்னுடையதாகவும் இருக்கலாம் என்ற காரணத்தால்... தன் குட்டிகளை பாதுகாக்கவே பெண் சிங்கங்கள் இந்த பாலியல் உத்தியை பின்பற்றுகின்றன. ஆக சிங்கங்களாக இருப்பதன் கடினம் அவற்றுக்கு மட்டுமே தெரியும்.
சுற்றுலா பயணியால் தான்சானியா காட்டுக்குள் நெஞ்சை பதறவைத்த சம்பவம்! | சமவெளி -6Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
