Kerala Horror: பாட்டி முதல் காதலி வரை... 5 பேரைக் கொன்ற இளைஞர் - கேரளாவை உலுக்கிய பயங்கரம்!

1 day ago
ARTICLE AD BOX

கேரள மாநிலம், திருவனந்தபுரம், வெஞ்ஞாறமூடு பேருமல பகுதியைச் சேர்ந்த அஃபான் (23) என்ற இளைஞர், நேற்று மாலை வெஞ்ஞாறமூடு காவல் நிலையத்தில் சரணடைந்து தனது குடும்பத்தினர் 6 பேரை கொலைசெய்ததாகக் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அஃபானை கைதுசெய்து சிறையில் அடைக்க எத்தணித்தபோது, எலி விஷம் சாப்பிட்டதாகக் கூறினார். அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அஃபான் கூறிய தகவலின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் 3 இடங்களில் வைத்து தனது உறவினர்களை அஃபான் கொலைசெய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அஃபானின் வீட்டில் அவரது சகோதரர் மற்றும் காதலி ஆகியோர் இறந்த நிலையிலும், அவரது தாய் படுகாயம் அடைந்த நிலையிலும் மீட்கப்பட்டனர். அஃபானின் பாட்டி, தந்தையின் சகோதரரையும், அவரது மனைவியையும் அஃபான் கொலைசெய்துள்ளார். தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரையும் சுத்தியலால் அடித்தும், கத்தியல் குத்தியும் கொலைசெய்துள்ளார். அஃபானின் தாக்குதலில் காயமடைந்த அவரது தாய் ஷெமினா (40) படுகாயங்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள கோகுலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

அஃபான் மற்றும் அவரால் கொலைசெய்யப்பட்டவர்கள்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "முதலில் திருவனந்தபுரம் பாங்கோடு பகுதியில் உள்ள தந்தையின் தாய் சல்மா பீவி (88)-யை கொலைசெய்துள்ளார் அஃபான். சல்மாபீவி கழுத்தில் கிடந்த நகைகளை எடுத்துக்கொண்ட அஃபான் அவற்றை அடகுவைத்து பணம் பெற்றுள்ளார். அந்த பணத்துக்கு சுத்தியலும், கத்தியும் வாங்கியுள்ளார். வெஞ்ஞாறமூடு முக்குந்நூர் பகுதியைச் சேர்ந்த தனது காதலி பஃர்ஷானா(19)-வை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து வெட்டி கொலைசெய்துள்ளார். அஃபானின் தம்பி அப்ஸான்(13) வெஞ்ஞாறமூடு அரசுப் பள்ளியில் படித்துவந்தார். பள்ளிக்குச் சென்று தம்பி அப்ஸானை அழைத்துவந்து வெஞ்ஞாறமூடு பகுதியில் ஹோட்டலில் குழிமந்தி சாப்பிட வாங்கிக்கொடுத்து வீட்டுக்கு அழைத்துவந்து அங்குவைத்து கொலைசெய்துள்ளான் அஃபான்.

கொலை வழக்கில் கைதான அஃபான்

வீட்டில் வைத்துதான் தாய் ஷெமினா(40)-வையும் கொலைசெய்யும் நோக்கில் சுத்தியலாலும், கத்தியாலும் தாக்கியுள்ளார். அதில் காதலியும், தம்பியும் இறந்தனர். தாய் ஷெமினா படுகாயங்களுடன் மயங்கினார். இதையடுத்து வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டரை திறந்துவிட்டு வெளியேறினார். தொடர்ந்து தந்தையின் சகோதரன் லத்தீப்(69) வீட்டுக்குச் சென்று லத்தீப் மற்றும் லத்தீப்பின் மனைவி ஷாஹிதா(59) ஆகியோரை வெட்டி கொலைசெய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர். அஃபானின் தந்தை ரஹீம் வளைகுடா நாட்டில் பர்னிச்சர் பிசினஸ் செய்துவருகிறார். அவருக்கு நிறைய கடன் இருபதாகவும், அவாரது கடனை அடைக்க உறவினர்கள் உதவவில்லை என்ற கோபத்தில் அஃபான் குடும்பத்தினரை கொலைசெய்திருக்கலாம் என அப்பகுதியினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மாதங்களாகத் திட்டம்; கும்பமேளாவிற்கு அழைத்து வந்து மனைவியைக் கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்!
Read Entire Article